புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 26, 2020)

நீதிமான்களின் வழி

சங்கீதம் 1:6

கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.


வேத வார்த்தைகளின்படி தன் நடக்கையை காத்துக் கொள்ளும் மனித னொருவனைப் பார்த்து அவன் அயலவர்களில் சிலர் அவனை கேலி செய்தார்கள்;. அதாவது, இந்த உலகத்திலே எப்படி உல்லாசமாக வாழ் ந்து களிப்பது என்பதை உணராமல், ஒரு புறம்போக்கான வாழ் க்கை வாழ்கின்றானே என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள். தேவனு க்கு பிரியமாக வாழ விரும்பும் மனித ர்கள் யாவரும் இத்தகைய வசைச் சொற் களை நிச்சயமாக கேட்டிருப்பார்கள். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்று பரிசுத்த வேதாகமத் திலே வாசிக்கின்றோம். கர்த்தரை கனத் தோடும் பயபக்தியோடும் சேவிப்பது மெய் ஞானத்தில் ஆரம்பம் என்றால், கர்த்தரை அசட்டை செய்து, துணிகர மான வார்த்தைகளை தேவனுக்கு எதிராக கூறுகின்றவர்கள் என்ன சொல்வது? மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணு கிறார்கள். (நீதி 1:7). இந்த உலகத்தின் முறைமையின்படி கல்விமான்களை ஞானிகள் என்றழைக்கின்றார்கள். ஆனால் ஒருவன் கர்த்தரை கனத்தோடும் பயபக்தியோடும் சேவிக்காதிருந்தால் அல்லது அவரு டைய போதகத்தை அசட்டை செய்யபவனாக இருந்தால் மெய் ஞானம் அவனிடத்திலில்லை. அதனால் அவர்கள் துணிகரம் கொண்டு, தேவன் எதை செய்யாதே என்று புறக்கணித்திருக்கின்றாரோ, அவைகளை ஆவ லோடு நடப்பிக்கின்றான். அதுமட்டுமல்லாமல், தங்களைப் போல வாழ்க் கையை நடத்தாதவர்களை பார்த்து, மதியீனர்கள் என்று நகைக்கின்றா ர்கள். “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளு டைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட் காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இர வும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனு~ன் பாக் கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். ஆகையால் துன் மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்ப தில்லை. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்க ரின் வழியோ அழியும்.” எனவே சோர்ந்து போகாமல் வேத வார்த்தை களின்படி உங்கள் நடக்கையை காத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

பெலப்படுத்தும் தேவனே, உம்மை அறியாத மனிதர்களின் அறி யாமையினாலே நான் சோர்ந்து பின்னிட்டு போகாதபடிக்கு நீர் என்னை அழைத்த அழைப்பிற்கு பாத்திரனாய் நான் நடக்க கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழி யாக ஜெபி க்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 4:3-4