தியானம் (ஐப்பசி 25, 2020)
தேவனின் அழகான திட்டம்
வெளி 22:12
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
யோவான் ஸ்நானன் என்ற தேவ ஊழியன், இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் முன்னோடியாக வந்திருந்தார். ஸ்திரீகளிடத்திலே பிறந் தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை என்று இயேசு கிறிஸ்து இவரைக் குறித்து சாட்சி கொடுத்தார். காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தான் செய்த எல்லா பொல்லா ங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்ட போது, தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, யோவா னையும் காவலில் அடைத்து வைத்தி ருந்தான். தன்னுடைய பிறந்த தினத் தின் கொண்டாட்டத்தில் பரிசுத்தவானா கிய யோவான் ஸ்நானனை சிரச்சேதம் பண்ணுவித்தான். இந்த கொடூரமான சம்பவத்தின்படி யோவான் ஸ்நான னைக் குறித்த தேவனுடைய திட்டம் பூர்த்தியாகிவிட்டதா? இந்த பூமியிலே பரிசுத்தவானாகிய யோவான் ஸ்நானின் பாடுகள் நிறைவேறியிருக்கின் றது. ஆனால் இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற் கும், அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்த மும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினி மித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார். இதோ, மேகங்களுடனே வருகிறார்;. கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்க ளும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவ ரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். ஆம் பிரி யமானவர்களே, அவரோடே கூட தம்முடைய பரிசுத்தவான்கள் அடை யும் பலனும் வருகின்றது. அந்நாளிலே தேவன் தம்முடையவர்களுக்கு ஆதிமுதலாய் நியமித்திருந்த அழகான திட்டம் நிறைவேறும். இந்த உலகத்திலே கண்ணீரோடு விதைக்கின்றவர்கள் பரலோகிலே கெம்பீர மாக அறுக்கும் காலம் வருகின்றது. எனவே, இந்த பூமியிலே தேவனு டைய சித்தம் உங்கள் வாழ்வில் நிறைவேற இடங் கொடுங்கள். பரம தேசத்திலே பரனோடு நீடூழி வாழும் பாக்கியத்தை எண்ணிப் பாருங்கள். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத் தையும் அழியாமையையும் நாடிச் செல்வோம்.
ஜெபம்:
நித்தியமான தேவனே, இந்த பூமியிலே வாழும் நாட்களிலே என்னை குறித்ததான உமது சித்தம் என்னில் நிறைவேறும்படி வாஞ்சிக்கி ன்றேன். என்னை பெலப்படுத்தி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ரோமர் 2:7