தியானம் (ஐப்பசி 23, 2020)
தயவுள்ளவர்களாயிருங்கள்
சங்கீதம் 103:10
அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நம க்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
பண்னை ஒன்றில் இணைந்து பண்ணை உதவியாளராக வேலை பார் க்கும்படிக்கு, ஒரு மனிதன், அந்த பண்னை முதலாளியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். அந்த ஒப்பந்தத்தின்படி, பண்ணை உதவியாளர் வேலை செய்யவேண்டிய நாட்கள், நேரம், ஊதியும், ஓய்வு நாட்கள் மற்றும் கடமைகளும் பொறுப்புக்களும் விளக்கிக் கூறப்பட்டது. ஒரு சில கிழமைகள் சென்ற பின்பு, ஒரு நாள் அந்த பண்ணை முதலாளி, தன் பண்ணை உதவியாளனாகிய அந்த ஊழியனை அழைத்து, அவன் செய்யத் தவறிய கடமையை சுற்றிக் காட்டி அவனை கண்டித்தான். ஒப்பந்தத்தின் படி, அவன் குற்றத்திற்காக ஊதிய கழி வை செய்து, அவனை வேலையிலி ருந்து நீக்கிவிட்டான். அதை கேள்விப்பட்ட சக ஊழியர்கள், ஏன் இப்படி யாக செய்தீர்கள் என்று பண்ணை முத லாளியைக் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு மறுமொழியாக, நான் அந்த ஊழியனுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி அவனை வேலை நீக்கம் செய்து கொண்டேன் அதில் என்ன தவறு என்று கேட்டுக் கொண்டான். ஒப்பந்தத்தின்படி அவன் வேலை நீக்கம் செய்யப்பட்டான் என்று முதலாளி கூறிய போது, சக ஊழியர்களுக்கு மேற்கொண்டு எதையும் கூற முடியவில்லை. பிரியமானவர்ளே, சட்டதிட்ட ஒழுங்கு முறைமைகளின்படி நாங்கள் ஒவ்வொருவரும் தேவனால் தண்டிக்கப் பட்டால் யார் அதில் தப்பித்துக் கொள்ள முடியும்? ஒருவரும் தப்பித்துக் கொள்ள முடியாது. இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன், நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிர மங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர் கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். எனவே, மன்னிப்பபையும், இரக்கத்தையும் சட்ட திட்டங்களின்படி வழங்காமல், எங்கள் பரம தந்தையைப் போல தாராளமாக அள்ளி வழங்குங்கள். உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற உங்கள் காரியங்களில், உங் கள் தயவை மற்றவர்களுக்கு காண்பியுங்கள். நியாத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.
ஜெபம்:
அன்பின் தேவனே, நீர் என்மேல் காட்டி வருகின்ற உம்முடைய இரக்கத்திற்கு முடிவில்லை. அதுபோல நானும் என்னுடைய காரியங்க ளிலே மற்றவர்களுக்கும் இரக்கத்தை காண்பிக்க உணர்வுள்ள இருதய த்தை தந்தருள்வீராக. இ ட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யாக்கோபு 2:13