புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 21, 2020)

யாரைப் பிரியப்படுத்துவது?

ரோமர் 8:8

மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.


ஒரு மனிதனானவன், தன்னை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்ட தனது தந்தையாரை அதிகமாக நேசித்து வந்தான். அந்தத் தந்தையார், தன் மகனாகிய அந்த மனிதனுக்கு, அவனது சின்ன வயதிலிருந்து தேவன்மேல் எப்படி விசுவாசமாய் இருக்க வேண்டும் என்பதை குறித்து சொல்லாலும் கிரியைகளாலும் கற்பித்து வந்தார். இந்த உலகத்திலே உள்ள மனிதர்கள் எல்லாரைப் பார்க் கிலும், தன் தந்தையாருக்கு எல்லா விட யத்திலும் நான் கடமைப்பட்டிருக்கின் றேன் என்று அந்த மனிதனானவன் கூறிக் கொள்வான். பல ஆண்டுகள் கடந்து சென்றபின்பு, சில மனிதர்கள் அவனுடைய தந்தையாருக்கு துரோகம் செய்து, அவரைக் துன்பப்படுத்தினார்கள். இதனால் அந்த மனிதன் மிகவும் மன வேதனையடைந்தான். அவன் தன் தந்தையாரை அதிகமாக நேசிப்பது உண்மை. அவன் தன் தந்தையாருக்கு நன்றியறிதலுள்ள வனாக இருக்க வேண்டும் என்பது உண்மை. ஆனால் தன் தந்தை தன க்கு கற்பித்து கொடுத்த விசுவாச வாழ்க்கையானது அவனை தேவனு க்கு விரோதமாக பாவம் செய்வதிலிருந்து காத்துக் கொண்டது. துரோ கத்தை துரோகத்தினால் வெற்றி கொள்ளுவது கிறிஸ்தவனின் பண்பு அல்ல. ஒருவன் மற்றவனுக்கு விரோதமாக குற்றம் செய்யும் போது அவன் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்கின்றான். கண்கண்ட மனிதனுக்கும், எங்களை அதிகமாக நேசிக்கின்றவர்களுக்கும், நன்றியறி தலுள்ளவர்களாய் இருப்பது நல்லது. ஆனால் மனிதர்களுக்கு நன்றிய றிதலுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கூறி, அப்படி இருப்ப தினால் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்யக் கூடாது. இந்த உலகத்தினாலுண்டான நீதியினால் தேவனை பிரியப்படுத்த முடியாது. அதாவது, இந்த உலக போக்கின்படி எங்களுக்குள் உண்டாகும் சிந் தையானது மாம்சத்திற்குரியது. அந்த வழியின் முடிவிலே நித்திய மரணம் இருக்கும். ஒருவனும் கெட்டுப்போகமல் நித்திய ஜீவனை அடை யும்படிக்கு பிதாவாகிய தேவன் தாமே தம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். அவருடைய வழியிலே நடப்பவன் முடிவில்லாத வாழ்வை பெற்றுக் கொள்கின்றான். “ஒருவ னுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்;. நீ தீமையினாலே வெல்ல ப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.” நீதிபரராகிய இயேசு வெளிப்படும் போது அவனவன் தன் தன் கிரியைகளுக்குரிய பலனை பெற்றுக் கொள்வது நிச்சயம்.

ஜெபம்:

நீதியின் தேவனே> மனிதர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதற்காக> இந்த உலக போக்கிலே நடந்து> உமக்கு பிரியமி ல்லாத காரியங்களை செய்யாதபடிக்கு என்னைக் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2