புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 20, 2020)

சமாதானத்தின் பிள்ளைகள்

மத்தேயு 5:9

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்


ஒரு ஐக்கியத்திலே இருந்த ஒரு விசுவாசி தன் உடன் சகோதரனொ ருவனுக்கு துரோகம் செய்ததால் அவர்களுக்கிடையே பிரிவினை ஏற்ப ட்டுவிட்டது. தனக்கு செய்யப்பட்ட தீங்கை நினைத்து மனம் தொய்ந்து போயிருந்த அந்த உடன் சகோதரனுக்கு அவ் ஐக்கியத்திலே இருந்த இன்னுமொரு மனிதன் ஆதரவாக இரு ந்தான். மாதங்கள் கடந்த பின்பு, குறிப் பிடப்பட்ட விசுவாசி தன் உடன் சகோ தனுக்கு செய்த துரோகத்தை உணர் ந்த போது, அவனுடன் ஒப்புரவாகும் படி வகை தேடினான். ஆனால், அந்த உடன் சகோதரனுடைய துன்ப வேளை யிலே அவனுக்கு ஆதரவாக இருந்த மற்றய மனிதனுக்கோ, அந்த உடன் சகோதரனானவன் தனக்கு விரோத மாக இருந்த சக விசுவாசியுடன் சமாதானம் செய்து கொள்ளுவதைக் குறித்து விருப்பமற்றவனாக இருந்தான். தன் இக்கட்டான வேளையிலே தனக்கு ஆதரவாக இருந்த அந்த மனிதனுடைய விருப் பத்திற்கு எதிராக எப்படி செயற்படுவது என்று அந்த உடன் சகோதரன், தனக்கு குற்றம் செய்த விசுவாசியுடன் சமாதானம் செய்து கொள்வதை தாம தித்துக் கொண்டிருந்தான். பிரியமானவர்களே, மேலே குறிப்பிடப்பட்ட சம்பவத்தை சற்று தரித்திருந்து சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையில்; வரும் பல சூழ்நிலைகளினாலே நாங்கள் மேலே குறிப்பிடப்பட்ட சம்பவத்திலுள்ள மூன்று மனிதர்களில் ஒருவருடைய நிலைக்கு நாங்கள் தள்ளப்படலாம். நாங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், நாங்கள் யார் என்பதையும், எங்களுக்கு கொடுக்கப்பட்ட தகுதியையும் ஒரு போதும் மறந்து போய்விடக் கூடாது. நாங்கள் பிதாவாகிய தேவனு டைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கின்றோம். இயேசு கிறிஸ்துவி லிருந்த ஆவியை பெற்றிருக்கின்றோம். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். ஐக்கியம், ஒருமைப்பாடு, சமாதானமாகிய இவைகள் தேவ புத்திரரின் குணயியல்புகள். ஆகவே நாங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று கூறிக் கொண்டு, சதோரருக்கிடையில் விரோதத்தை உண்டு பண்ணுவ தையும், பிரிந்திருக்கும் சகோதரர்கள் மறுபடியும் ஒப்புரவாகுவதற்கும் தடையாக இருக்கவும் முடியாது. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு டையதல்ல. எந்த வேளையிலும் சபை ஐக்கியத்தின் ஒருமைப்பாட்டி ற்காக கிரியைகளை நடப்பிக்கின்றவர்களாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

சமாதானத்தின் தேவனே, உம்முடைய திவ்விய சுபாவத்திற்கு பங்காளியாகிய நான், உமக்கு விரோதமாக பாவம் செய்யாதபடிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபி க்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:15