புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 18, 2020)

வேதமே அரு மருந்து

சங்கீதம் 119:165

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகு ந்த சமாதானமுண்டு; அவ ர்களுக்கு இடறலில்லை


தன் தோட்டத்தில்;மிகவும் கடினமாக வேலை செய்து கொண்டிருந்த மனிதனொருவனை, ஒரு வனவிலங்கு ஒன்று கடித்து காயப்படுத்தி விட் டது. அவனோடு தோட்டத்திலே வேலை செய்து கொண்டிருந்தவர்கள், நேரத்தை தாமதிக்காமல், உடனடியாக அவனை ஊரிலுள்ள மருத்து வரிடம் கொண்டு சென்றார்கள். மருத்துவர், அந்த வனவிலங்கினால் நீர்வெறுப்பு நோய் (Rabies) உண்டாகாதபடிக்கு அதற்குரிய தடுப்பு மருந்தையும், காயங்கள் ஆறும்படிக்கு அதற்குரிய மருந்தையும், அடுத்த சில கிழமைகளுக்கு எடுத்து எப்படியாக அவன் தன்னை பராமரித்துக் கொள்ள வேண் டும் என்பதையும் எடுத்துரை த்தார். நோய்களுக்கு வைத்தியர்கள் மருந்தை கொடுப்பது போல, எங்கள் பரம வைத்தி யராகிய இயேசு எங்கள் ஆன்மீக நோய்கள் தீரும்படிக்கான அரு மருந்தை (வழிமுறைகளை) எங்களுக்கு கூறியிருக்கின்றார். எடுத் துக் காட்டாக, மற்றவர்கள் எங்களுக்கு அநியாயம் செய்யும் போது அது மனவேதனையை உண்டாக்கின்றது. இதனால் மனிதர்கள் மனதி லே வன்மம், பகை, கசப்பு என்பவைகளை வளர்த்து, பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற மனநிலையை அடைகின்றார்கள். அப்படிப்பட்ட மனதிலே தேவ சமாதானம் ஆட்கொள்ள முடியாது. மனதிலே கவலை பெருகும் போது என்ன செய்ய வேண்டும்? துன்பத்திலிருந்து விடுதலையடைய விரும்பினால், “உங்களைத் துன்பப்படுத்துகிறவர் களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிரு ங்கள்.” “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெப த்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்கு ள்ளாகக் காத்துக்கொள்ளும்.” பிரியமானவர்களே, இப்படியாக, எங்க ளுக்கு கோபம் வரும்போது என்ன செய்ய வேண்டும்? எரிச்சல் பொறா மை வரும் போது என்ன செய்ய வேண்டும்? அதாவது அவற்றை மேற் கொள்வதற்கான அருமருந்தை பரிசுத்த வேதாகமம் எங்களுக்கு கற்றுத் தருகின்றது. இது இயேசுவின் வழி. அவ்வழியிலே நடப்பதே கிறிஸ்தவனின் பண்பு. அந்த வழியிலேயே நித்திய ஜீவன் உண்டு. தேவனுடைய வசனம் சமூலமும் சத்தியமுமாயிருக்கின்றது.

ஜெபம்:

ஆளுகை செய்யும் தேவனே, நீர் ஒருவரே எல்லாவற்றையும் அறிந்தவர். உம்முடைய திருச்சித்தம் நிறைவேறுவதற்கு தடையாக நான் போய்விடாதபடிக்கு என் ஆத்துமாவை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்யிர் 4:6-7