புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 17, 2020)

துன்பத்தில் மத்தியில் சமாதானம்

மத்தேயு 5:44

உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.


இவர்கள் என்னை நிந்தையான வார்த்தைகளால் பேசி, அதிகமாக துன்பப்படுத்துகின்றார்கள் நான் என்ன செய்வேன் என்று ஒரு ஸ்திரி போதகரிடம் தன் நிலையை கூறினாள். போதகரோ அவளை நோக்கி: “ஆதி அப்போஸ்தலரின் நாட்களிலே, சீ~ர்கள் பெருகினபோது, உதவி ஊழியத்திற்காக பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற் றிருக்கிற ஏழுபேரை தெரிந்து கொண் டார்கள். அவர்களில் ஒருவராகிய ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்ல மையினாலும் நிறைந்தவனாய் ஜனங் களுக்குள்ளே பெரிய அற்புதங்களை யும் அடையாளங்களையும் செய்தான்.” இன்று நாங்கள் ஸ்தேவானுடைய வாழ் க்கையை சற்று ஆராய்ந்து பார்ப்போ மென்றால், இந்த சீஷன் அற்புத அடை யாளங்களை செய்வதினால் விசேஷித்தவனாக இருக்கவில்லை. தேவ ஆவியை பெற்று தன் நற்சாட்சியான வாழ்வை மரணம் வரை காத்துக் கொண்டதினால் விசே~pத்தவனா னான். எந்த நிலையிலும் விசுவாசத்தைவிட்டு தளர்ந்து போகாமல் மிக வும் உறுதியாக இருந்தான். யூத மத அதிகாரிகள் ஸ்தேவானுடைய அறிவுரையை கேட்டபோது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல் லைக் கடித்தார்கள். உரத்தசத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காது களை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன் மேல் பாய்ந்து, அவ னை நகரத்துக்குப் புறம்பே தள்ளி அவனைக் கல்லெறிந்தார்கள். ஸ்தே வானை நிந்தித்து துன்பப்படுத்தினார்கள். அந்த வேளையிலும் அவன் மனம் தளர்ந்து போகாமல், “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று தன்னை தேவனிடம் அர்ப்பணித்தான். பின்பு முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான். இந்த நற்சாட்சியை சற்று சிந்தித்துப் பாருங்கள். இரத்தம் சிந்தி மரிக்கும் தறுவாயிலும் தன்னை துன்ப ப்படுத்துகின்றவர்களுக்காக ஜெபம் செய்தான். சகோத ரியே, இரத்தம் சிந்தும்படியான துன்பம் உனக்கு ஏற்படவில்லையே. எங்கள் கர்த்த ராகிய இயேசு கூறியது போல உன்னை துன்பப்படுத் துகின்றவர்களு க்காகவும் நிந்திக்கின்றவர்களுக்காகவும் ஜெபம் பண்ணு ம்படி பழகிக் கொள். அதனால் உன்னுடைய மனதிலே பெரிதான சமாதானம் உண் டாகும் என்று போதகர் பதில் கூறினார்.

ஜெபம்:

சகலவித ஆறுதலின் தெய்வமே, உம்முடைய வார்த்தையின்படி என்னை நிந்தித்து துன்பப்படுத்துகின்றவர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்காக வேண்டுதல்; செய்ய எனக்கு பெலன் தந்தருள்வீராக.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப் 6:57-60