புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 15, 2020)

கிறிஸ்துவின் சிந்தை

பிலிப்பியர் 2:3

ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையி னாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீ ர்கள்


மீட்பராகிய இயேசு கிறிஸ்து, தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனு க்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனு~ர் சாயலானார். ஏன் இயேசு கிறிஸ்து தம்மை இப்படியாக தாழ்த்தினார்? நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக் கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்க ப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண் டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த் தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத் தையும் அவர்மேல் விழப்பண்ணினார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடி க்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன் னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன் பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். அவர் மனு~ரூபமாய்க் காணப்பட்டு, மரண பரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் பிதாவாகிய தேவ னுக்கு கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். மானிடம் மீட்ப டையும்படிக்காய் தன்னைத் தாழ்த்தினார். இயேசுவிடம் இருந்த அந்த சிந்தை எங்களில் உருவாக வேண்டும். இந்த உலகத்திலே நன் மை செய்வது இலகுவான காரியமல்ல. செய்த நன்மைக்கு நன்றியை பெற் றுக் கொள்வது மிகவும் அரிதான விடயம். இப்படிப்பட்ட சந்ததி யின் நடுவிலே நாங்கள் சாரமேற்றப்பட்ட உப்பைப் போல, கிறிஸ்துவின் பண்பை வெளிப்படுத்த வேண்டும். எப்படி? கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனு டைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறு முறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். தனக்கானவை களை நோக்குபவன் கிறிஸ்துவின் பண்பையுடையவன் அல்ல. பிறரு க்கானவைகளையும் நோக்குபவனே கிறிஸ்துவின் பண்பையுடையவா னாக இருக்கின்றான். எனவே பாடுகள் வந்தாலும், கிறிஸ்துவின் சிந்தை யை தரித்தவர்களாக மனத்தாழ்மையோடு முன்னேறிச் செல்வோம்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, கிறிஸ்துவின் சிந்தையை தரித்தவனா(ளா)க,சுய நலத்தைவிட்டு, பிறர் நலம் கருதி வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 53:3-8