புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 14, 2020)

பாவத்திலிருந்து விடுதலை

நீதிமொழிகள் 28:13

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.


சமஸ்த இஸ்ரவேலை ஆளுகை செய்து வந்த தாவீது ராஜா, பெரிதான பாவத்தில் அகப்பட்டுக் கொண்டார். தான் ஆளுகை செய்யும் ராஜ் யத்திலே, எதையும் செய்வதற்கு அவருக்கு அதிகாரம் இருந்தது. எவ ரும் அவருக்கு எதிர்த்து நிற்க முடியாது. ஆனால், கர்த்தர் நாத்தான் என்னும் தீர்க்கதரிசியை தாவீதினிடத்தில் அனுப்பினார். நாத்தான் தாவீதை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரி த்திரன். ஐசுவரியவானுக்கு ஆடு மாடு கள் வெகு திரளாயிருந்தது. தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்த விர வேறொன்றும் இல்லாதிருந்தது. அது அவனோடும் அவன் பிள்ளைக ளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடி யிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப் போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போ க்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன் றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்கு ட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமைய ல்பண்ணுவித்தான் என்று தாவீது செய்த துரோகத்தின் அகோரத்தை வெளிப்படுத்தும்படிக்கு ஒப்பனையான கதை ஒன்றை கூறினான். அப் பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரண த் திற்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லு கிறேன். அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்த படியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்த வேண் டும் என்றான். அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; என்றான். தாவீது ராஜா முரட்டாட்டம் பண்ணாமல், தன் பாவத்தை உணர்ந்து, தேவன் முன்னிலையில் தன்னை தாழ்த்தினான். இந்த தாழ்மையின் பண்பு ஒரு கிறிஸ்தவனிடம் இல்லையென்றால் அவன் சாரமிழந்த உப்பைப் போல இருப்பான். தாழ்மையுள்ளவர்க ளுக்கு தேவன் கிருபை அளிக்கின்றார். பெருமையுள்ளவர்களுக்கோ எதிர்;த்து நிற்கின்றார்.

ஜெபம்:

நொருங்குண்டதும் நறுங்குண்டதுமான இருதயத்தை புறக்கணிக்காத தேவனே, கிறிஸ்தவ பண்பாகிய மனத் தாழ்மையுள்ளவன(ளா)ய் வாழும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 4:6