புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 13, 2020)

புதிதும் ஜீவனுமான வாழ்க்கை

மத்தேயு 5:13

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்?


உப்பினது பல பயன்பாடுகளைப் பற்றி நாங்கள் யாவரும் அறந்திருக்கி ன்றோம். ஆகாரங்களை கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் பொருளாக (preservative) இருப்பது அதன் தனிச்சிறப்புகளில் ஒன்று. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே, தம்முடைய சீஷர்களை நோக்கி: நீங்கள் இந்த பூமிக்கு உப்பாக இருக்கின்றீர்கள் என்று கூறியிருக்கின்றார். உப்பானது அதன் தொழிற்பாட்டை நிறைவேற்று ம்படி சாரமேற்றப்பட்டிருக்கின்றது. சார மற்ற உப்பு அதன் தொழிற்பாட்டை இழந்து போய்விடும். அதன் பின்னர் அதை எப்படி அழைத்தாலும், அது உபயோகமற்ற பொருளாகவே இருக் கும். அவ்வண்ணமாகவே ஒரு கிறிஸ்த வன், கிறிஸ்துவின் பண்புகளை இழ ந்து போகும் போது, அவனை எப்படி அழைத்தாலும், பிரயோஜனமற்ற மனிதனாக மாறிவிடுவான். கிறிஸ் துவின் ஆவியில்லாதன் கிறிஸ்துவினுடையவனல்ல. “நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனிகொ டாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனி கொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேச த்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக் கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொ டுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என் னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடி யைப் போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவை களைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந் துபோம்.” என்று இயேசு கூறியிருக்கின்றார். ஒருவன் தன்னை கிறிஸ்த வன் என்று கூறியும், அவன் கிறிஸ்துவில் நிலைத்திருக்காவிடின், அவன் கிறிஸ்துவின் பண்பையுடையவன் அல்ல. அவன் வாழ்க்கை சாரமற்ற உப்பைப் போல பயனற்றதாக இருக்கும். எனவே கிறிஸ்து வில் நிலைத்திருந்து அவருடைய திவ்விய பண்புகளை உங்கள் வாழ்க் கையில் வெளிக்காட்டுங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, கர்த்தராகிய இயேசுவில் நிலைத்திருந்து, உம்முடைய ராஜ்யத்திற்கு பயனுள்ள கருவியாய் இந்த பூவுலகிலே கிரியைகளை நடபிக்க பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 15:1-8