தியானம் (ஐப்பசி 12, 2020)
பிரகாசிக்கும் சுடர்கள்
மத்தேயு 5:16
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளை க் கண்டு, பரலோகத்திலி ருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசி க்கக்கடவது.
கானகப் பாதை வழியாக தன் ஒட்டகத்துடன் சென்று கொண்டிருந்த மனிதன், தொலைவிலே தண்ணீர் தடாகம் ஒன்றை கண்டான். தன் தாகத்தை தீர்த்து, இளைப்பாறும்படிக்கு மகிழ்ச்சியுடன் அந்த தண்ணீர் தடாகத்தை நோக்கி விரைந்து சென்றான். அவன் சற்று அருகில் வந்த போது, அது ஒரு கானல் நீர் என்பதை உணர்ந்து கொண்டான். இவ்வ ண்ணமாகவே இன்று சில மனிதர்களுடைய வாழ்க்கையும் இருக்கின் றது. தன் வாழ்க்கையில் பல இன்னல் க ளும் துன்பங்களும் சூழ்ந்திருக்கும் வேளையிலே ஒரு மனிதனானவன், தன க்கு ஆறுதல் கிடைக்கும் இடத்தை தேடி அழைந்தான். ஒரு உடன் சகோ தரனுடைய வாழ்க்கையை பார்க்கும் போது, அவனுடைய வாழ்க்கையும், சுபா வமும் அவனுக்கு அது ஆறுதல் தரும் இடமாக காட்சியளித்தது. அந்த மனி தனானவன், தனக்கு ஆறுதல் கிடை க்கும் என்று குறிப்பிடப்பட்ட உடன் சகோ தரனை சந்தித்து பேச ஆரம்பித்தான். நாளடைவிலே அவர்கள் ஒருவரை ஒரு வர் அறிந்து கொண்டார்கள். சில மாத ங்களுக்கு பின்னர், அந்த மனிதனானவன், தனக்கு ஆறுதல் கிடைக்கும் என்று தன் சூழ்நிலையை, குறிப்பிடப்பட்ட உடன் சகோதரனுக்கு எடுத்துக் கூறியதையிட்டு மிகவும் மனவருத்தம் அடைந்தான். ஏனெனில், குறிப்பிடப்பட்ட உடன் சகோதரனுடைய வாழ்க்கையும், அவன் சுபாவ முமோ, அவன் முன்பு காட்சியளித்தது போல ஆறுதலினிடமாக இருக்க வில்லை. இதுவும் ஒரு கானல் நீர் போன்ற காட்சி என்பதை உணர்ந்து கொண்டான். பிரியமானவர்களே, இன்று எங்கள் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதை நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். செழி ப்பாக வளர்ந்து வெளித் தோற்றத்திற்கு கவர்ச்சியாக காணப்படும் கனி யற்ற அத்திமரம் போன்ற வாழ்க்கை எங்களுக்கு ஆகாதது. எங்களைச் சூழ உள்ள மனிதர்கள் எங்கள் நற்சாட்சியான வாழ்வின் கனிகளைக் கண்டு, அதன் நிமித்தம், எங்களது பரம பிதாவை மகிமைப்படுத்தும்படி க்கு, அவருடைய பிள்ளைகளாக அழைக்கப்பட்ட எங்களது வாழ்வு கனியுள்ளதாக அமைய வேண்டும். இருள் சூழ்ந்த இந்த உலகித்திலே நாம் பிரகாசிக்கும் சுடர்களாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றோம். எனவே அன் போடு மற்றவர்களுடைய வாழ்க்கையிலே ஒளி வீசக்கடவோம்.
ஜெபம்:
உம்முடைய மகிமையின் ஒளியை எங்களில் பிரகாசிப்பிக்க பண்ணிய தேவனே, பார்வைக்கு செழிப்பான வாழ்க்கையை வாழாமல், உண்மையுள்ள கனிகொடுக்கும் வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்
மாலைத் தியானம் - மத்தேயு 6:1-8