புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 10, 2020)

அன்பின் கிரியைகள்

1 யோவான் 3:18

என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.


கடந்த சில நாட்களாக பிதாவாகிய தேவன் எங்கள் மேல் பாராட்டிய அன்பையும், எங்களுக்கு கொடுத்திருக்கும் மேன்மையையும் தியானம் செய்தோம். அவருடைய பிரியமுள்ள பிள்ளைகளாக, பெற்ற பொறு ப்பை நிறைவேற்றும் ஊழியர்களாக, முறுமுறுப்பில்லாத நல்ல போர்ச் சேவகர்களாக, கடமையுணர்வுள்ள உக்கிரணக்காரர்களாக, தம்முடைய மேய் ச்சலின் ஆடுகளாக, தெரிந்துகாள்ளப்ட்ட சந்ததியாக, ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாக, கிறிஸ்துவின் இர த்தத்தினாலே பாவங்களற சுத்திகரி க்கப்பட்ட பரிசுத்த ஜாதியாக, தேவ னுக்கென்று வேறுபிரிக்கப்பட்ட அவ ருடைய சொந்த ஜனங்களாக, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக அழைப்பைப் பெற்றிருக்கின்றோம். இந்த அழைப்பை சிந்தித்துப் பாரு ங்கள். பொதுவாக பிள்ளைகளு கடைய பொறுப்பு என்ன? ஊழியர்க ளுடைய பொறுப்பு என்ன? போர்சேவகனுடைய பொறுப்பு என்ன? உக் கிரணக்காரனுடைய பொறுப்பு என்ன? மணவாட்டியினுடைய பொறுப்பு என்ன? இவை ஒவ்வொன்றிலும் ஒரு மேன்மையான அழைப்பும், பொறு ப்பும், ஐக்கியமும் உண்டல்லவோ! ஒருவன் கடமைக்காக கணவனாக இருந்தால் அதை குறித்து மனைவி என்ன சொல்லுவாள்? அல்லது ஒரு ஸ்திரி கடமைக்காக மனைவியாக இருந்தால் அவளின் கணவன் அதில் பிரியமாக இருப்பானோ? ஒரு வேளை இந்த பூமியிலே அத்தகைய உறவுகளும், ஐக்கியங்களும் அங்கீகரிக்கப்படலாம். ஆனால், தேவனோ டுள்ள ஐக்கியமாகுதலின் மையப்பொருள் அன்பாக இருக்கின்றது. நான் என்னை எப்படியாகவும் அழைத்துக் கொள்ளலாம். அதாவது, தேவனு டைய பிள்ளை, ஊழியன், போர்ச்சேவகன், உக்கிரணக்காரன், தேவனு டைய மந்தை, தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, ராஜரீகமான ஆசாரியக் கூட்டம், பரிசுத்த ஜாதி, தேவனுக்கு சொந்தமான ஜனம், கிறிஸ்துவின் மணவாட்டி சபை என்று தேவன் எங்களுக்கு கொடுத்த தகுதிகளை வரிசைப்படுத்தலாம். ஆனால், தேவ அன்பு ஒருவனிடம் இல்லாதிருந் தால் அவன் தேவனை இன்னும் அறிய வேண்டிய பிரகாரமாக அறிய வில்லை. “பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கட வோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லா தவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.”

ஜெபம்:

அன்பாகவே இருக்கின்ற தேவனே, நீர் எனக்கு தந்த தகுதிகளை நாவினால் அறிக்கையிடுவதுடன் நிறுத்திவிடாமல், உண்மையான அன்புள்ள கிரியைகளை காண்பிக்கவும் கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 16:14