புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 09, 2020)

மணவாளன் வருகிறார்

மத்தேயு 25:6

நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.


இந்த உலகிலே மணவாளன், மணவாட்டி, திருமணம் என்ற பதங்களை பற்றி பேசும் போது, முதலாவதாக சரீர பிரகாரமான உறவுகளை குறி த்த எண்ணமே மனிதர்களின் மனதிலே உண்டாகின்றது. ஏனெனில், மண்ணானவன் மண்ணுக்குரியபடி சிந்திக்கின்றான். பூமியிலிருந்துண்டா னவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்;. ஒரு மனிதனானவன், இயேசு கிறிஸ்து வழியாக மீட்பை பெற்று, ஞானஸ்ந hனத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்து, தூய வாழ்க்கை வாழும்படிக்கு ஒரு சபையிலே இணை ந்து கொள்கின்றான். இவ்வாறாக இந்த பூமியிலே அநேகமாயிரம் சபைகளும் அதிலே கோடிக் கணக்கான அங்கத் தவர்களும் இருக்கின்றார்கள். ஆனால், அந்த சபைகளிலுள்ள ஆத்துமாக்களில் தேவ சித்தத்தை தங்கள் வாழ்வில் நிறை வேற்றுகின்றவர்கள் யாவரும் தேவனு டைய திருச்சபையிலே இசைந்த ஆத்து மாக்களாய் இணைக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்த ஆத்துமாக்கள் தேவ னுடைய மணவாட்டி சபை என்று அழைக்கப்படுகின்றார்கள். பரலோகரா ஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர் கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாத வர்களுமாயிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடு த்துக்கொண்டு போனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டு போகவி ல்லை. ஆயத்தமாக, விழிப்புடன் இருந்த புத்தியுள்ள 5 கன்னிகைகளும் இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக ஆயத்தமுள்ள மணவாட்டி சபை க்கு ஒப்பாயிருக்கின்றார்கள். இந்த மணவாட்டி சபையானது மண வாள னாகிய இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமானது. இந்த ஐக்கியம் இந்த பூமிக்குரியதல்ல. இந்த ஐக்கியம் தேவனுடைய ராஜ்யத்திற்குரியது. மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே மணவாட்டி சபையின் ஆத்ம நேச ராக இருப்பார். தன்னுடைய மணவாட்டி சபையை மீட்டுக் கொள்ளும் படிக்கு தன் உயிரையே தியாகம் செய்த மீட்பராக அவர் இருக் கின்றார். அவருடைய சமுகம் பேரின்பமானது. அவர் சமுகத்தில் சஞ்சல மும் தவிப்பும் ஓய்ந்து போகும். இத்தகைய அழைப்பைப் பெற்ற நாங் கள், நினையாத நேரம் வரவிருக்கும் எங்கள் ஆத்தும நேசராகிய இயே சுவை எதிர்கொண்டு போகும்படிக்கு ஆயத்தமுள்ளவர்களாக இருப்போம்.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, இத்தகைய மேன்மையான அழைப்பை நீர் எங்களுக்கு தந்ததிற்காக நன்றி. புத்தியுள்ள கன்னிகைகளைப் போல கறைதிரையற்றவர்களாக உம்முன் நிற்க எங்களை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - வெளி 19:7