புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 07, 2020)

பெரிதான சிலாக்கியம்

1 பேதுரு 2:9

தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.


ஒரு தேசத்தை ஆண்டு வந்த ராஜா, வருடாவருடம் தன்னுடைய ராஜ்ய த்தின் ஆண்டு விழா அன்று, குடியுரிமையில்லாமல் தன் தேசத்தில் வாழும் மக்களில் சிலருக்கு குடியுரிமையை வழங்குவது வழக்கமாக இருந்தது. பொதுவாக இந்த உரிமையானது குறிப்பிட்ட அந்நிய ஜன ங்களின் தகுதிகள் மற்றும் அவர்களின் அந்தஸ்தின் அடிப்படையி லேயே கொடுக்கப்பட்டு வந்தது. அவ்வண்ணமாக உரிமையை பெற்ற வர்கள் அந்த தேசத்திலே ஒரு சாதாரண குடிமக்களாகவே இருப்பார் கள். ஆனால் எங்களுக்கு கிடைத்த குடியுரிமையின் மேன்மையை சற்று எண்ணிப் பாருங்கள். நாங்கள்; அந்த கார பிசாசானவனுடைய ராஜ்யத்திற் குட்பட்டவர்களாக இருந்து வந்தோம். அந்த அந்தகார இருளின் அதிகார த்திலிருந்து, தம்முடைய நிலையான ராஜ்யத்திற்கு பங்காளிகளாக தேவா தி தேவன் எங்களை அழைத்திரு க்கின்றார். இந்த உலகிலே குடியுரி மைகள் தகுதியின் அந்தஸ்தின் அடி ப்படையிலே கொ டுக்கப்படுகின்றது. அந்த உரிமையை பெறுவதற்கு ஒரு விலை (கிரயம்) கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அழியாத தேவ னுடைய ராஜ்யத்தின் குடியுரிமையை அழிந்து போகின்ற இந்த உலகத்தின் தகுதிகளினாலும் அந்தஸ்தினாலும் பெற்றுக் கொள்ள முடியாது. நமக்கோ, தேவனுடைய கிருபையினாலே இந்த மேன்மை உண்டானது. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவா சிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடை யும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர் ந்தார். குமாரனாகிய இயேசு கிறிஸ்து வழியாக எங்களை தம்முடைய பிள்ளைகளாக மாற்றி, கிறிஸ்துவிலிருந்த ஆவியை எங்களுக்கு கொடு த்திருக்கின்றார். கிறிஸ்து வழியாக நாங்கள் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியானோம். பிரதான ஆசாரியராகிய கிறிஸ்துவோடே தேவனுடைய துதியை சொல்லும் ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும் ஏற்படுத்தப்பட் டிருக்கின்றோம். கிறிஸ்துவின் இரத்தத்;தினாலே பாவங்களற சுத்திகரிக் கப்பட்டு பரிசுத்த ஜாதியாக்கப்பட்டிருக்கின்றோம். தேவனுக்கென்று வேறு பிரிக்கப்பட்ட அவருடைய சொந்த ஜனங்கள் ஆக்கப்பட்டோம். இத்தனை பெரிய அழைப்பை பெற்ற நாங்கள் இதை அற்பமாக எண் ணாதபடி க்கு, இந்த அழைப்பு எங்களில் நிறைவேறும்படிக்கு பிரயாசப்படுவோம்.

ஜெபம்:

இரக்கத்தில் ஜசுவரியமுள்ள தேவனே, அற்பமான என்னை உம் முடைய ராஜ்யத்திற்கென்று பிரித்தெடுத்தீர். அந்த மேன்மையான அழை ப்பை உணர்ந்து வாழும்படி கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:1-8