புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 06, 2020)

சிநேகிதர்கள் யார்?

நீதிமொழிகள் 27:6

சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.


சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்;. (நீதி 17:17). என்ற வார்த்தைக்கு அமைய கர்த்தராகிய இயேசு எக்காலத்திலும் எங்களை சிநேகிக்கின்றார். உத்தம மார்க்கத்தில் நடக்கின்றவன் தன் தோழனுக்கு தீங்கு நினைக்க மாட்டான். (சங் 15:3). அது போல உத்தமராகிய இயேசு எப்போதும் எங்களுக்கு நன்மை செய்கின்றவராகவே இருக்கி ன்றார். சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள். (நீதி 27:6). உண்மையான சிநேகிதனி டத்தில் வஞ்சனை இல்லை. அவன் தன் சிநேகிதனுடைய நன்மை கருதி, எப்போதும் தன் சிநேகிதனிடம் உண் மையை பேசுகின்றான். சிநேகிதனு டைய கடிந்து கொள்ளுதல் நன்மைக் குரியது. அது போலவே எங்கள் இயேசுவும் எங்களை நேசிக்கின்றார். இயேசுவை குறித்ததான எங்கள் சிநேகம் எப்படி இருக்கின்றது? செழிப்பான காலங்களிலே சிநேகிதன் என்றும், நெருக்கடியான வேளையிலே அவருடைய சிநேகத்தை மறந்து போகின்றவர்களாக இருக்கின்றோமா? யூதா ஸ்காரியோத் என்னும் மனிதன் இயேசுவோடு கூட இருந்த நெருங்கிய பன்னிரண்டு சீஷர்களில் ஒருவனாக இருந்தான். அந்நாட்களிலே இயேசுவை கைது செய்யும்ப டிக்கு யூத அதிகாரிகள் வகை தேடித்திரிந்தார்கள். யூதா ஸ்காரியோத், இயேசுவின் சிநேகத்தை மறந்து அந்த அதிகாரிகளுடன் உடன்படிக்கை பண்ணிக் கொண்டான். தன் சிநேகிதனை காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். குறித்த நாள் வந்தபோது, கர்த்தராகிய இயேசு தாம் செல்ல வேண்டிய பாதையை குறித்து திகி லடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது என கூறினார். அந்த இராத்திரியிலே யூதா ஸ்காரியோத் கர்த்தரை ரபீ என்று அழைத்து, முத்தமிட்டு காட்டிக் கொடுத்தான். அன்பான சிநேகிதனுக்கு வஞ்சனையான முத்தத்தை கொடுத்தான். இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்ன த்திற்காக வந்திருக்கிறாய் என்றார். (மத் 26:50). இன்று நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உயர்வான நேரத்திலும், தாழ்வான நேரத்திலும், அன்பரின் சிநேகத்தை மறந்து புத்தியீனமாக அவருடைய வார்த்தைகளுக்கு எதிராக துரோகம் செய்யாமல், அவரு க்கு உண்மையான சிநேகிதராக நாங்கள் வாழ வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, வாழ்க்கையிலே நெருக்கங்கள் சூழ்ந்து கொள்ளும் போது, இயேசுவின் சிநேகத்தை மறந்து, தேவ வார்த்தைக்கு எதிராக துரோகம் செய்யாதபடிக்கு எங்களை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 26:47-50