புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 05, 2020)

இயேசுவின் சிநேகிதர்கள்

யோவான் 15:14

நான் உங்களுக்குக் கற்பி க்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.


ஒரு மனிதனானவன், பல ஆண்டுகளாக தனது நண்பனைக் கண்ட வுடன், பலர் முன்னிலையில், தன் கைகளை நண்பனின் தோள்மீது போட்டு கொண்டு “இவன் என்னுடைய தோழன், என் உயிர் நண்பன்” என்று தோழமை கொண்டாட ஒரு போதும் தயங்குவதில்லை. ஆனால், அந்த மனிதனானவன், தன் நண்பனுக்கு நம்பிக்கை துரோகம் செய்து வந்தான். ஒரு தடவையல்ல பல தடவைகள் இவ்வண்ணமாக, மனி தர்கள் முன்னிலையில் தோழமை கொண்டாடுவதும், பின்பு நண்பனுக்கு எதிராக செயற்படுவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் அந்த மனிதனானவன், தன் நண்பனை கண்ட தும், வழமையாக செய்வது போல, தன் கையை நண்பனின் தோளின்மீது போட்டு, நண்பா சுகமாக என்று கேட்டான். பல ஆண்டு காலமாக பொறுமையாக இருந்த நண்பன், மறு மொழியாக: நண்பா என்று நீ என்னை அழைத்தால், நீ ஒரு நண்பனைப் போல நடந்து கொள்ள வேண்டும். இக்கட்டும் நெருக்கமும் சூழும் போது உண்மையான நண்பர்கள் தங்கள் நட்பை, நற்கிரியைகள் வழி யாக வெளிக்காட்டுவார்கள் என கூறினான். ஒரு சமயம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீ~ர்களை நோக்கி: இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன் என்று கூறினார். சற்று சிந்தித்து பாருங்கள். தேவனுடைய பிள்ளைகளாகிய நாங்கள், தேவனுடைய வீட்டாராக இருந்து அவர் தந்த பொறுப்பை (ஊழியத்தை) நிறைவேற்றுகின்றோம். அந்த சிலாக்கியம் மட்டுமல்ல, இயேசு எங்களை தம் நண்பர்களாக கருதி தாம் அறிந்த இரகசியங்களை எமக்கு வெளிப்படுத்துகின்றார். இந்த நட்பு எதற்கு? மேலே குறிப்பிடப்பட்ட மனிதனைப் போல முகஸ் துதி செய்வதற்காகவா? இயேசு என்னுடைய தோழன் எனவே நான் எதையும் செய்வேன் என்று துணிகரம் கொள்வதற்காகவா? இல்லை. பிரியமானவர்களே, ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. சிநேகிதராகிய இயேசு தம்முடைய உயிரை எங்களுக்காக கொடுத்தார். நாங்கள் அவருடைய சிநேகிதராக இருந்தால், அவருடைய சித்தத்தை எங்கள் வாழ்வில் நிறைவேற்றுகின்றவர்களாக வாழக்கடவோம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கின்ற தேவனே, இத்தனை மகத்துவமுள்ள பத வியை தகுதியற்ற எங்களுக்கு கொடுத்திருக்கின்றீர். உம் அன்பை உண ர்ந்து கொள்ளும் இருதயத்தை எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 9:15