புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 04, 2020)

சுதந்திரத்தில் பங்கடையும் நாள் வரைக்கும்

1 யோவான் 3:1

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப் படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்;


ஒரு பண்ணையின் உரிமையாளர் தூர தேசத்திற்குச் செல்ல வேண்டி இருந்ததால், தன்னுடைய மகனை அழைத்து, தான் திரும்பி வரும்வரை பண்ணையின் விவகாரங்களை கவனிக்கும்படியான பொறுப்பை அவ னிடம் கொடுத்தார். தந்தையார் தேசத்திலே இல்லாத நாட்களிலே, அவன் அந்த பண்ணைக்கு சுதந்தரவாளியாக இருந்த போதிலும், தந் தையார் வீடு திரும்பும் போது தான் செய்த கிரியைகளைப் பார்த்து அவர் ஆச்சிரியப்பட்டு மகிழ்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தந்தை தன்னிடம் கொடுத்த பொறுப்பை நிறை வேற்றும்படி உத்தம ஊழியனாக இரு ந்து, வெயிலிலும் மழையிலும், குளிரி லும் கடுமையாக உழைத்து வந்தான். எதிர்பாராத நாளிலே, தந்தையார் வீடு திரும்பிய போது, தன்னுடைய மகனு டைய பொறுப்புணர்வையும், கடும் உழைப்பையும் கண்டு ஆச்சரியப்பட்டு பெரும் மகிழ்ச்சியடைந்தார். பிரியமான சகோதர சகோதரிகளே, பிதாவாகிய தேவன், இரக்கத்தில் ஐசுவரிய முள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் இயேசு கிறிஸ்துவுட னேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிப்பை பெற்றுக் கொண் டோம். எம்மைத் தம்முடைய மகனாக மகளாக தெரிந்து கொண்டார். அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனு டைய ஆவியை எங்கள் இருதயங்களில் அனுப்பினார். நாம் தேவனு டைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக் குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்;. அவருடைய பிள்ளைகளாகிய நாங்கள் கிறிஸ்துவுடனே கூட பரலோக ராஜ்யத்தின் உடன் சுதந்திரர்களாக இருக்கின்றோம். எனவே தேவன் குறித்த காலம் நிறைவேறும்வரைக்கும் அவர் எங்களை நம்பி, தந்த பொறுப்பை செய்து வருகின்றோம். தன் தந்தையின் பண்ணையை நன்றாக விசாரி த்து வந்த நல்ல மகனைப் போல, நாங்களும் உத்தம ஊழியர்களாக வும் நல்ல உக்கிராணக்காரர்களாயும், எல்லா சூழ்நிலைகளிலும்; எங்கள் பொறுப்பை நிறைவேற்றி முடிக்கின்றவர்களாக வாழ வேண்டும். கர்த்தருடைய நாளிலே, அவர் எங்கள் வாழ்க்கையைக் குறித்து பெரும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்கின்ற எண்ணம் எங்களில் ஒவ்வொரு நாளும் பெரு வேண்டும்.

ஜெபம்:

பரலோக பிதாவே, நீர் உம்முடைய பிள்ளைகளுக்கு முன் குறித்த சுதந்திரத்தில் நான் பிரவேசிக்கும் நாள் வரைக்கும் நீர் தந்த பொறுப்பை நிறைவேற்றி முடிக்கத் தக்கதாக என்னை நடத்திச் செல்வீராக.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 4:6-7