புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 03, 2020)

நிலையான வாக்குத்தத்தம்

1 யோவான் 2:25

நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.


பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது. அந்திக்கிறிஸ்து வரு கிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்தி க்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம் என்று தேவ ஊழியராகிய யோவான் கூறியிருப்பதை இறு திவரைக்கும் மறந்து போய்விடாதிருங்கள். நீங்கள் அறிந்து கொண்ட சத்தியத்தை இறுகப்பற்றிக் கொள்ளு ங்கள். இயேசுவே கிறிஸ்து என்பதே அந்த சத்தியம். இயேசு வழியாகவே பாவத்திலிருந்து மீட்பு உண்டானது. இயேசு வழியாகவே ஒருவன் பிதா வினிடத்திற்கு செல்ல முடியும். இயே சுவிலே நாங்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்கின்றோம். இயேசு வைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலி க்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமார னையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. அந்திக்கிறிஸ்துகள் உங்க ளிடம் நேரடியாக வந்து, இயேசு கிறிஸ்து அல்ல என்று கூறப்போ வதில்லை. அந்திக்கிறிஸ்துவின் ஆவிகள் உங்களை வஞ்சிக்கும்படிக்கு, தந்திரமான உபதேசங்களைக் உங்களுக்கு கூறுவார்கள். அந்த உபதேச மாவது, உங்களை இயேசு கிறிஸ்துவை விட்டு தூரப்படுத்துகின்றதா யிருக்கும். நாங்கள் யாவரும் திராட்சை செடியாகிய இயேசு கிறிஸ் துவிலே ஒட்டப்பட்ட கிளைகளாய் இருக்கின்றோம். அந்த பிணைப்பை உடைத்துப் போடுவதே அந்திக்கிறிஸ்துகளின் தந்திரம். என்னிடத்தில் வாருங்கள் என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கின்றார். இயேசுவே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்க, இன்று பலர், இயேசு கிறிஸ்து விடம் நேரடியாக செல்வதற்கு பதிலாக வேறு வழிகளையும், வேறு மனிதர்களையும், இந்த உலக பொருட்களையும் தேடுகின்றார்கள். இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல்தைரியமு ள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள். இயேசுவின் நாமத்தினாலே நீங்கள் பெற்ற தேவ ஆவியினுடைய அபிN~கம் உங்க ளில் நிலைத்திருக்கிறது, அந்த சத்திய ஆவியானவர் சகலத்தையுங்கு றித்து உணர்த்தி வழிநடத்துகின்றார். நித்தியஜீவனை அளிப்பேன் என் பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். அந்த வாக்குத்தத்தத்தில் உறுதியாக நிலைத்திருங்கள். இயேசு கிறிஸ்துவை பற்றிக் கொள்ளு ங்கள்.

ஜெபம்:

காருண்யம் நிறைந்த தேவனே, வாழ்வின் பின்னடைவுகளைக் கண்டு நான் சோர்ந்து போய்விடாதபடிக்கு, உம் அன்பின் ஆழத்தை உணர்ந்து உம்மண்டை சேர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:16