புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 02, 2020)

அழுத்தும் பாரங்கள்

1 யோவான் 2:17

உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவ னுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றெ ன்றைக்கும் நிலைத்திருப்பான்.


“நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித் திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.” என்று இயேசு கூறியி ருக்கின்றார். அதாவது, இந்த உலகத் தின் போக்கின்படி தங்கள் வாழ்க் கையை அமைத்துக் கொள்கின்றவர் கள், இந்த பூமிக்குரியவைகளை தங் களின் பிரதான நோக்கமாக வைத்து அவைகளையே நாடித் தேடுகின்றா ர்கள். அவைகளை அடையும்படிக்கு அயராது உழைக்கின்றார்கள். தாங்கள் நாடித் தேடுவதை அடைந்து கொள் ளும் போது அவைகளினால் திருப்த்தி யடைகின்றார்கள். தாங்கள் அடைந்து கொண்ட உலகத்தின் பெருமையினால், அதை அடைந்து கொள்ளாத மற்றவர்கள் மதியற்ற வர்கள் என எண்ணிக் கொள்கின்றார்கள். ஆனால் தாங்கள் அடைந்து கொண்ட திருப்த்தியானது கானல் நீரைப் போல சீக்கிரத்தில் மறைந்து போய்விடும் என்பதை உணராதிருக்கின்றார்கள். இவர்களின் வாழ் க்கையின் முன்னேற்றத்தின் அளவுகோல் இந்த உலகத்திற்குரி யவைகள். நாங்களும் அவ்வண்ணமாகவே வாழ்ந்து வந்தால், இந்த உலக போக்கின்படி வாழ்பவர்களால் அங்கீகரிக்கப்படுவோம். ஆனால் எங்கள் பிதாவாகிய தேவன் தாமே, தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து வழியாக, எங்களை இந்த உலகத்தின் போக்கிலிருந்து வேறு பிரிந்த வாழ்க்கை வாழும்படிக்கு பிரித்தெடுத்தார். இயேசுவின் நாமத்திலே நாங்கள் பிதாவைக் கேட்டுக் கொள்வது எதுவோ, அதை பிதாவாகிய தேவன் எங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நாங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், எங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும் இயேசு கிறிஸ்துதாமே எங்களை ஏற்படுத்தியிருக்கின்றார். பிரியமானவர்களே, நீங்கள் இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றிச் செல்லும் போது, இந்த உலக போக்கின்படி வாழ்பவர்கள் உங்களை பகைத்தால் அதைக் குறித்து ஆச்சரியப் படாதிருங்கள். உங்களைச் சூழ உள்ளவர்களின் அழுத்தத்தினால் (pநநச pசநளளரசந) இந்த உலகத்தின் இச்சைகளுக்கு இடங் கொடாதிருங்கள். பிதாவின் அன்பில் நிலைத்திருங்கள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிற வனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

ஜெபம்:

இந்த உலகத்தால் உண்டாகும் அழுத்தங்களினால் என் அழை ப்பையும் அதன் மேன்மையையும் மறந்து போய்விடாமல், பந்தையப் பொருளின் அழைப்பை நோக்கி தொடர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2