புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 01, 2020)

பூரண திட்டம்

கொலோசெயர் 3:2

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளை யே நாடுங்கள்.


ஒரு சிறு பையனானவன், அயலிலுள்ள தன் நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவதற்கு தன் தந்தையாரிடம் அனுமதி கேட்டான். தந்தையார் அவனை நோக்கி: நாளை காலை, பாடசாலை அனுமதிக்காக, உனக்கு ஒரு முக்கியமான நேர்முகத் தேர்வும், பரீட்சையும் உண்டு. எனவே, நீ இன்று இளைப்பாறி ஆயத்தப்பட வேண்டும். இன்று நீ விளையாட் டுக்குச் சென்று உன்னை காயப்படுத் திக் கொள்ள முடியாது என்றார். மக னானவனோ, அப்பா இப்படியாக எத் தனையோ தடவைகள் விளையாடச் சென்றிருக்கின்றேன், ஒன்றும் நடக்கவி ல்லையே என்று கூறினான். அவனு டைய ஆதங்கம் எல்லாம் இன்றைய நாளைக் குறித்ததாகவே இருந்தது. ஆனால் தந்தையாரோ, தன் மகனின் வாழ்க்கையைக்குறித்து ஒரு பெரி தான திட்டம் தடைப்படக் கூடாது என்பதில் மிகவும் கவனமுள்ளவராக இருந்தார். அன்றைய தினத்திலே, தன் தந்தை தன்னை விளையாட அனுமதிக்காதபடியால் அவன் தன் தந்தை தன்னுடன் மிகவும் கடுமையாக நடந்து கொள்கின்றார் என்று எண்ணிக் கொண்டான். பிரியமானவர்களே, எங்கள் பரம பிதா, தம்முடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையைக் குறித்ததான ஒரு அழகான திட்டத்தை வைத்திரு க்கின் றார். ஆனால் சில பிள்ளைகளோ “இன்று என் வாழ்க்கை ஏன் இப்படியாக இருக்க வேண்டும்.” “நாளை ஏன் நாங்கள் இதை செய்ய வேண்டும்” என்று மேலே குறிப்பிடப்பட்ட சிறுபையனைப் போல எண்ணு கின்றார்கள். இப்படிப்பட்டவர்களுடைய நோக்கம் குறுகிய கால த்தின் சுகபோகங்களைக் குறித்ததாக இருக்கின்றது. மனிதனுடைய நாட்கள் இந்தப் பூமியிலே குறுகியதாக இருக்கின்றது. அந்த வாழ்க்கையின் பாதையிலே மனிதர்களுக்கு பல எதிர்பார்ப்புக்கள் உண்டு. அந்த எதிர்பார்ப்புக்கள் இந்தப் பூமிக்குரியதாக இருக்குமாயின், அவை யாவும் இந்த வாழ்க்கையோடு அழிந்து போய்விடும். ஆனால் எங்கள் பரம பிதாவின் திட்டம் நித்தியமானது. அது அழியாததும் மாச ற்றதுமான பரலோக ராஜ்யத்திற்குரியது. பிதாவாகிய தேவன் தம்மு டைய பிரதான திட்டம் நிறைவேறும்படிக்கு தம்முடைய குமாரனாகிய இயேசு வையே பலியாக ஒப்புக் கொடுத்து, அவர் வழியாக எங்களை தம்முடைய பிள்ளைகளாக்கிக் கொண்டார். எனவே, அவருi டய மேலான திட்டம் எங்களில் நிறைவேறும்படிக்கு பரலோகத்திற்குரியவை களையே நாமும் வாஞ்சிப்போம்.

ஜெபம்:

அநாதி ஸ்நேகத்தால் எங்களை நேசித்த தேவனே, என் வாழ்க் கையைக் குறித்ததான உம்முடைய திட்டம் என்னில் நிறைவேறும்படிக்கு நான் உணர்வுள்ள வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 1:12