புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 30, 2020)

முன்னேறிச் செல்வோம்

பிலிப்பியர் 3:12

நான் அடைந்தாயிற்று, அல் லது முற்றும் தேறினவ னானேன் என்று எண் ணாமல்,


நீங்கள் எப்படியாக உங்கள் சேவையை வெற்றிகரமாகச் செய்து முடி த்தீர்கள் என்று அயலில் வசித்த இளம் ஆசிரியர்;, பாடசாலையிலும், ஊரிலும் நன்மதிப்புப் பெற்று தன் சேவையை முடித்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரிடம் கேட்டார். ஓய்வுபெற்ற ஆசிரியர்: மகனே, என் சேவையின் ஆரம்பத்தில் நான் திற மையான ஆசிரியர், நான் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையே சிற ந்தது என்று எண்ணங் கொண்டிரு ந்தேன். மற்றவர்களுடைய நல் ஆலோ சனைக்கோ, ஆக்கபூர்வமான கருத்து க்களுக்கோ என்னிடத்தில் இடமிருக்க வில்லை. என்னுடைய சேவையும் பெரும் வெற்றியாக இருக்கவில்லை. குறிப்பிட்ட ஒரு சம்பவத்தின் பின்னர், எனக்கு மூத்தவர்களிடமும், நான் கல்வி கற்றுக் கொடுக்கும் மாணவர் களிடமும் அவர்களின் கருத்து க்களை கேட்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு மாணவனும் ஒரு தனிரகம் என்பதை அறிந்து கொண்டு, அவர்களின் அடிப்படை தேவைகளை புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். மாணவர்கள் எனக்கு பயந்திருப்பது என் வெற்றியல்ல, அவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதே என் வெற்றி என்பதை அறிந்து செயற்பட ஆரம்பித்தேன். என் தவறுகளை உணர் ந்தேன், அவைகளை படிப்படியாக சீர் செய்து கொண்டேன். இதனால் சேவையிலே முன்னேற்றத்தை காண ஆரம்பித்தேன். நான் கடந்த வரு டம் ஓய்வு பெறும்வரைக்கும் அப்படியே செய்து வந்தேன் என்று மறு மொழி கூறினார். இது ஆசிரியர்களுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ உரிய காரியமல்ல. இது எங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் பயிற்சி யாக செய்யப்பட வேண்டிய காரியமாகும். அதாவது, நான் அடைந்தா யிற்று, எனக்கு எல்லாம் தெரியும், இவ்வளவு அனுபவம் எனக்குண்டு, நான் முற்றிலும் தேறினவனானேன் என்னும் எண்ணத்தை எங்களை விட்டு அகற்றிவிட வேண்டும். நான் தவறிய இடங்களை ஆராய்ந்து பார் த்து, அந்தத் தவறுகளை மீண்டும் விடாதபடிக்கு முன்னேறிச் செல்ல வேண் டும். என்னை குறித்து மற்றவர்களின் கருத்தை கேட்பதினால், அவர்கள் கூறுவதின்படி எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்பது பொருள் அல்ல. ஒரு வேளை அந்தக் கருத்துக்கள் எங்களை நாங்கள் ஆராய்ந்து பார்ப்பதற்கு உதவியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் எங்களுக்கு முன்பாக ஓடி நற்சாட்சி பெற்ற முன்னோர்களின் ஆலோசனைகளை நாம் பற்றிக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

அழைத்த தேவனே, நான் பின்னானவைகளை மறந்து, முன் னானவைகளை நாடி பந்தையப் பொருளை பெற்றுக் கொள்ளும்படி முன் னேறிச் செல்லும்படி என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-2