புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 29, 2020)

இன்னுமொரு சந்தர்ப்பம்

மத்தேயு 7:12

ஆதலால், மனுஷர் உங் களுக்கு எவைகளைச்செ ய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங் கள்


ஒரு மாணவன், கணித பாடத்தின் முக்கிய பரீட்சையொன்றிலே மிகவும் குறைந்த புள்ளிகளைப் பெற்றதினால் அந்த தவணையில் தோல்வியடை ந்தான். கொஞ்சமும் ஆயத்தமில்லாமல் பரீட்சையை செய்திருக்கின்றா யே, ஏன் படிக்கவில்லை என்று ஆசிரியர் அந்த மாணவனைக் கேட்டார். மணவனோ, கடந்த சில கிழமைகளாக குடும்பமாக தாங்கள் எதிர் நோக் கும் சில சவால்களை ஆசிரியரிடம் விள க்கிக் கூறினான். இந்த நிலையில் நான் என்ன உனக்குச் செய்ய வேண்டும் என ஆசிரியர் கேட்டார். எனக்குத் திரும்பவு ம் மீள்பரீட்சையை செய்யும்படிக்கு தன க்கு சந்தர்ப்பம் தரும்படி வேண்டிக் கொண்டான். க~;டங்களும், நெருக்கங் களால் மனிதர்கள் தவறும் போது, தங்களுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்குமோ என்று எதிர்பார்ப்பது வழ க்கம். நீங்கள் ஒரு படுகுழியில் விழு ந்து விட்டால், உங்களை சூழ உள்ளவர்கள் நீதி உங்களைக் குறித்த ததான நியாயத்தை பேசுவதை விரும்புவீர்களோ அல்லது அவர்கள் உங்களை தயவாய் தூக்கி விட வேண்டும் என்று விரும்புவீர்களோ? பெரும் குற்றத்தில் அகப்படும் போது, மனிதர் முன்னிலையில் அவமானத்தையும் நிந்தையையும் அடைவதை விரும்புவீர்களா அல்லது அதிலிருந்து சீக்கிரமாய் விடுதலையடையும்படி விரும்புவீர்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். எங்களுக்கு எப்படி செய்யப்பட வேண்டும் என்று விரும்புகின்றோமோ அது போலவே மற்றவர்களின் பிரச்சனைகளின் வேளையிலே நாங்களும் செயற்பட வேண்டும். எங்கள் தேவனாகிய கர்த்தர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இரு க்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயி ருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். இந்த தயவை எனக்கு மட்டுமல்ல அவர் யாவர்மேலும் காண்பிக்கின் றார் என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது. இரக்கமுள்ளவர்கள் பாக் கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். (மத்தேயு 5:7). மற்ற வர்களுடைய தாழ்விலே இரக்கத்தை காண்பித்து விடுதலை செய்யுங் கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, எத்தனையோ சந்தர்ப்பங்களை நீர் எனக்கு திரும்பத் திரும்ப தந்து கொண்டிருக்கின்றீர் என்பதை உணர்ந்து, அது போல மற்றவர்களுக்கும் நான் சந்தர்ப்பம் கொடுக்கும் இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:12