புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 28, 2020)

கிறிஸ்து உருவாகுமளவும்...

கலாத்தியர் 4:19

என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்க ளுக்காக மறுபடியும் கர் ப்பவேதனைப்படுகிறேன்.


“நான் சொல்லுவதை எவரும் கேட்கமட்டோம் என்கின்றார்களே, நான் ஒரு ஊழியன் என்ற கனத்தை கூட கொடுக்காதிருக்கின்றார்களே” என்று ஒரு உதவி ஊழியன் போதகரிடம் கூறினார். தம்பி, தீர்க்கதரிசிகளில் யாருடைய சொல்லை ஜனங்கள் கேட்டார்கள்? பின்னர் தேவனுடைய குமாரனாகிய இயேசு வந்தபோது, அவருக்காகிலும் அவர்கள் செவி கொடுத்தார்களா? அவரை சிலுவையி லே அறைந்தார்கள். வாலிபனாக இருக் கும் நீயும், இயேசுவின் சத்தத்திற்கு முற்றாக கீழ்படிகின்றாயா? சற்று சிந்தி த்துப்பார். காரியம் அப்படியாக இரு க்க, மற்றவர்கள் நீ சொல்வதை கேட்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பாய்? நாங்கள் தேவனு டைய ஊழியத்தை செய்யும்படி அழை க்கப்பட்டோம். தேவனுக்கு பிரியமாக உத்தம ஊழியனாக விளங்க வேண்டும் என்றால், தேவனுடைய வார்த் தையின்படி கட்டளையிடப்பட்ட யாவ ற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவே ண்டிய கடமையைமாத் திரம் செய்தோம் என்று சொல்ல வேண்டும் என்று எங்கள் எஜமான னாகிய இயேசு கூறியிருக்கின்றார். ஒருவன் விதையை நட்டால், நீ நீர்பாய்ச்சு, கர்த்தர் அதை விளையச் செய்வார். நல்ல கனிகொடாத மரங்களை சுற்றிலும் கொத்தி எருப் போடுவதைப் போல நாங்கள் தேவனுடைய வார்த்தையை அவர்க ளுக்கு பொறுமை யோடு சொல்ல வேண்டும். ஜனங்கள் மத்தியிலே மாறுதலையும், மன ந்திரும்புதலையும் கர்த்தருடைய ஆவியானவர் உண்டு பண்ண வேண் டும். மனம் மாறுதல் அவர்களில் உருவாகும் படிக்கு பொறுமையுடன் அவர்களுக்காக நாங்கள் ஜெபம் செய்ய வேண்டும். அவனவன் தன் தன் கிரியைகளுக்கு தக்க பலனை கர்த்தரிடத்தில் பெற்றுக் கொள்வான். நானும் நீயும் அவ்வண்ணமாகவே பெற்றுக் கொள்வோம் என்று ஆலோ சனை கூறினார். இந்த ஆலோசனை ஊழியர்களுக்கு மட்டுமல்ல எங்கள் யாவருக்கும் உரியது. முதலாவதாக, மற்றவர்கள் எங்கள் ஆலோ சனைகளை கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்க முன்பு, நாங்கள் எங்கள் எஜமானனாகிய இயேசுவின் வார்த்தைகளை கேட்டு அதன்படி நடக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் குறைவுகளிலிருந்து கிறிஸ்துவுக்குள் நிறைவடைய வேண்டும் என்ற எண்ணம் எங்களில் இருக்க வேண்டும். அப்படி இல்லாதிருந்தால் நாங்கள் எப்படி கிறிஸ்து வுக்குள் நிறைவு அடைவோம் என்று எதிர்பார்க்க முடியும்?

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே, நாளுக்கு நாள் உம்முடைய வார்த்தையின் வழியிலே நான் நிறைவை நோக்கி முன்னேறிச் செல்ல செல்லும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:12