புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 27, 2020)

மனத்தாழ்மையும் சாந்தமும்

யாக்கோபு 4:10

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப் பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.


சீரும் சிறப்புமாக திகழ்ந்த நாட்டிலே ஜனங்கள் ஒருமைப்பாட்டுடன் அர சாளும் அரசனுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தார்கள். இந்த நாட்டிலே குழப்பங்களும், பொருளாதார வீழ்ச்சியையும் உண்டு பண்ண வேண் டும் என்று எதிரிகள் பல முறை முற்றுகை செய்தும், படு தோல்விய டைந்து போனார்கள். ஆண்டுகள் சென்றபின்பு, ஜனங்களின் ஒருமைப் -பாட்டை குளைத்துப் போடும்படிக்கு எதிரிகள் சூழ்ச்சி செய்தார்கள். அதற் குரிய தீவினையான வித்துக்களை அதி காரத்திலிருந்த சிலரின் இருதயத்தில் போட்டு விட்டார்கள். அந்த தீவினை யான எண்ணங்கள் சிலரின் மனதிலே வளர ஆரம்பித்து, மேலும் பலருடைய மனதிலே விதைக்கப்பட்டது. இதனால் ஒன்றுபட்டிருந்த ராஜ்யம் இரண்டு பிரி வாயிற்று. அந்த வேளையிலே எதிரிகள் அந்த நாட்டை முற்றுகை செய்து, நாட்டின் பல பாகங்களை சேதப்படுத்தி, நாட்டின் பொருளா தாரத்தை பின்னடையச் செய்தார்கள். இதனால், அந்த நாட்டிலே மேலும் குழப்பங்களும், வன்முறைகளும், களவு, கொள்ளைகளும் அதி கமாயிற்று. இப்படிப்பட்ட சம்பவங்களை மனிதர்கள் பல முறைபடி த்தாலும், குடும்பங்களிலே, சபைகளிலே, பிரிவினைகள் ஏற்படும் போது, அதனால் ஏற்படும் பாரதூரமான பின்விளைவுகளை குறித்து உணர்வற்ற வர்களாக மாறிவிடுகின்றார்கள். கருத்து முரண்பாடுகளுடன் வாழ்ந்து வரும் குடும்பத்தை குளைத்து விடுவது எதிரிக்கு சுலபமான செயல். அதுபோலவே கருத்து முரண்பாடுகளுடன் இருக்கும் சபையிலும், ஜனங்கள் இரண்டு பிரிவாக பிரிந்திருப்பதால், தங்கள் பொதுவான எதிரி யார் என்பதை மறந்து, தங்கள் மத்தியிலே கலகங்களை ஏற்படுத் திக் கொள்கின்றார்கள். இதனால் தங்கள் மேன்மைனயான இலக்கு என்ன என்பதை மறந்து, பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை செய்வ திற்கு பதிலாக, தங்களுடைய மாம்ச சித்தத்தை நிறைவேற்றுகின்றார் கள். உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகி றது. உங்கள் அவய வங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா? (யாக்கோபு 4:1). தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். சாந்தத்தையும், மனத்தாழ்மையையும் இயேசுவிடம் கற்றுக் கொள்ளு ங்கள். உங்களை தாழ்த்தி ஜெபத்திலே தரித்திருங்கள். நன்மையான மாற்றங்களை கர்த்தர் உண்டு பண்ணுவார்.

ஜெபம்:

உன்னதமான தேவனே,எங்கள் அழைப்பின் இலக்கை மறந்து, எதிரியின் சூழ்ச்சியின் வலையில் சிக்கிக் கொள்ளாதபடிக்கு மனத் தாழ்மையுடன் உம்மை சேவிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:29