புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 26, 2020)

பயப்பட வேண்டாம்

சங்கீதம் 62:1

தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது. அவரால் என் இரட்சிப்பு வரும்.


அகாஸ்வேரு என்னும் ராஜாவின் நாட்களிலே, ஆமான் என்னும் மனி தனை ராஜா மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களு க்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான். ஆகை யால் ராஜ கட்டளையின்படி ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமா னை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்;. ஆனாலும் மொர்தெகாய் என் னும் மனிதன் அவனை வணங்கவு மி ல்லை, நமஸ்கரிக்கவுமில்லை. கார ணம் மொர்தெகாய் யூதனாக இருந்த hன். யூதர்கள் மெய்யான தேவனொரு வரையே மாத்திரமே வணங்கி நமஸ் கரிப்பார்கள். இப்படிப்பட்ட கனத்தை அவர்கள் எந்த ஒரு மனிதனுக்கும் கொடுப்பதில்லை. இதனால் ஆமான் மொர்தெகாயின்மேல் மூர்க்கம் நிறைந்தவனானான். ஆனாலும் மொர்தெ காயின் மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பகாரி யமாக இருந்ததால். இப்படிபட்ட யூதர்கள் யாவரையும், ராஜ்யமெங்கும் கொன் று போட வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தான். அகஸ்வேரு ராஜா வின் ராஜ்யத்தை பொறுத்தவரையில், அந்நியனாகிய மொர்தெகாய் ஒரு சாதரண மனிதன். ஆனால் தேவனுக்கு கொடுக்க வேண்டிய கன த்தை தேவனுக்கு மாத்திரம் கொடுப்பதில் மிகவும் உறுதியுள்ளவனாக இருந்தான். இதனால் அவனுக்கும் அவனுடைய ஜனங்களுக்கும் தேவ னால் இரட்சிப்பு உண்டாயிற்று. இன்று உங்கள் வாழ்க்கையில் தேவன் நியமித்த ஒழுங்குகளை சமரசம் செய்யும்படியான அழுத்தங்கள் என்ன? “ஒரு முறை செய்து விட்டு ஒழுங்குகளை மீறினால் என்ன? அதில் ஒன்றுமில்லை” என்று மனிதர்கள் கூறுவதுண்டு. ஒரு முறை துணிகர மாக தேவ ஒழுங்குகளை மீறுபவன், தன் சாட்சியை இழந்து போவ தால், மறுபடியும் அதை மீறு வதற்கு சாத்தியங்கள் அதிகமாயிருக்கும். “தேவனே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்க லமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. நீங்கள் எதுவ ரைக்கும் ஒரு மனு~னுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனை வரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள். கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்காக யுத்தம் செய்கின்ற தேவன். என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு நான் நம் புகிறது அவராலே வரும்.” என்று சங்கீத புத்தகத்திலே கூறிய பிரகார மாக தேவனாகிய கர்த்தரிடத்திலிருந்து இரட்சிப்பு வரும் என்று தேவ னுடைய குறித்த நேரத்திற்காக திடமனதோடு நாம் காத்திருக்க வேண்டும்.

ஜெபம்:

பராக்கிரமமுள்ள தேவனே, எப்படிப்பட்ட சவால் நிறைந்த நேரத்தி லும், நான் உமக்கெதிராக பாவம் செய்யாதபடிக்கு, உறுதியாய் உம் வார்த் தையில் தரித்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபி க்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எஸ்தர் 3:1-6