புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 25, 2020)

தீராத தொல்லைகள்

சகரியா 4:6

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவி யினாலேயே ஆகும் என் று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


வைத்தியரிடம் சென்ற மனிதன், தனக்கேற்பட்டிருக்கும் வியாதியை மாற்ற முடியாது என திட்டமாக வைத்தியரிடம் கூறினான். அவன் பேசு வதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த வைத்தியர், மறுமொ ழியாக, உன்னுடைய வியாதியை தீர்க்கும் மருந்து என்னிடம் உண்டு. முதலாவதாக அதை நீ நம்ப வேண்டும். அத்துடன் நீ செய்ய வேண்டிய காரியங்கள் உண்டு. அதற்கு நீ உடன் பட வேண்டும். அதற்கு நீ சம்மதிக்கா விட்டால், நீ சொல்வது போலவே உன் வியாதியும் தீராத வியாதியாய் உன் னோடே இருக்கும் என்று கூறினார். எங் களுடைய நாளாந்த வாழ்க்கையிலும், “இது சரிவராது”, “இந்த பகை தீரா தது” “எங்களுக்கிடையில் சமாதானம் நிலைக்காது” என்று பல திட்டமான தீர் மானங்களை நாம் எடுத்து கொள்வது ண்டு. அதாவது, எங்கள் பிரச்சனை நிர ந்தர மானது என்ற முடிவிற்கு வருவதால், எங்கள் பரம வைத்தியராகிய இயேசுவை எங்கள் தீர்மானங்களிலிருந்து நாம் அகற்றி விடுகின்றோம். மனிதனால் கூடாத காரியம் பல உண்டு. ஆனால் எங்கள் இயேசுவின் நாமத்தினால் எல்லாம் ஆகும். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப் பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள், கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீப மானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனு~னாகச் சிரு~;டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சொன்ன சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மாறாதவராயிருக்கின்றார். சில பிரிவினைகளை நம்முடைய பெலத்தால் தீர்த்துக் கொள்வது மிக வும் கடினம். ஆனால், மனதார உங்களை கர்த்தரிடம் ஒப்படையுங்கள். “கர்த்தாவே, நான் சமாதானம் செய்ய விரும்புகின்றேன்” என்று இதயபூ ர்வமாக கூறுங்கள். தீர்க்கமுடியாத எந்த வேற்றுமையையும் அவர் ஒற்றுமையாக மாற்றுவார். பிரச்சனை தீராது என்று முற்றுப்புள்ளி வைக்காமல், தேவனை நம்பி வழியை அவரிடம் ஒப்படையுங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, இனி தீர்க்கமுடியாது என்று அவிசுவாசியாக வாழாமல், உம்மால் எல்லாம் கூடும் என்று உம்மிடத்தில் விசுவாசமாயிருக்க என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:13-18