புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 23, 2020)

வேறுபிரிக்கப்பட்டவன்

சங்கீதம் 24:4

கைகளில் சுத்தமுள்ளவ னும் இருதயத்தில் மாசி ல்லாதவனுமாயிருந்து,தன் ஆத்துமாவை மாயை க்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.


யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எங்களுடைய சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரி க்கும். இந்த சுத்திகரிப்பு மனிதனுடைய இருதயத்தை சுத்தப்படுத்தும். சுத்தப்படுத்திய பின்பு, அது மறுபடியும் மாசுபடாமல் காப்பதற்குரிய எல்லையை கர்த்தர் வைத்திருக்கின் றார். “என் முழு இருதயத்தோடும் உம் மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடா தே யும். நான் உமக்கு விரோதமாய்ப் பாவ ஞ் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.” என்று சத்திய வேதத்திலே பார்க்கின் றோம். தூய்மையாக்கப்பட்ட இருதயம் தேவனுக்கேற்றதாயிருப்பதால், அவனு டைய கரத்தின் கிரியைகள் யாவும் இ தயபூர்வமானதும், சுத்தமுள்ளதாயும் இருக்கும். கர்த்தாவே, யார் உம்மு டைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. அவன் தன் நாவினால் புறங் கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான். அதாவது, தேவனுடைய வழியிலே நடந்து, இதயபூர்வமாக தேவனு டைய சத்தியத்தை பேசுவதால், ஆகாத சம்பா~ணைகளும், முறுமுறு ப்பும் அவனிடத்திலிருக்காது. ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பா னவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்;. ஆணை யிட்டதில் தனக்கு ந~;டம் வந்தாலும் தவறாதிருக்கிறான். தன் பணத்தை வட்டிக்குக்கொடுக்கமாட்டான். மற்றவனுடைய க~;டத்தை தன்னுடைய ஆதாய தொழிலாக எண்ண மாட்டான். குற்றமில்லாதவனுக்கு விரோத மாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என் றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை. (சங் 15:1-5). சூரியனுக்கு கீழே உள்ளவைகளெல்லாம் மாயையே. ஆகவே அவன் ஆத்துமா பூமிக் குரியவைகளின் மேல் சாராமல், நித்தியமான மேலானவைகளை நாடித் தேடும். அவன் இருதயத்திலே கபடு இருக்காது. நாங்கள் யாவரும் இவ்வண்ணமாக வாழும்படிக்கு வேறுபிரிக்கப்பட்டிருக்கின்றோம்.

ஜெபம்:

பரிசுத்தம் நிறைந்த தேவனே, தூய வாழ்க்கை வாழும்படிக்கு என்னை நீர் வேறுபிரித்திருக்கின்றீர். அதை உணர்ந்தவனா(ளா)க, உம்மு டைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 6:17-19