புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 21, 2020)

ஆறுதல் உண்டு

1 சாமுவேல் 1:15

நான் கர்த்தருடைய சந் நிதியில் என் இருதயத் தை ஊற்றிவிட்டேன்.


அன்னாள் என்னும் ஸ்திரியை அவளுடைய கணவன் மிகவும் அதிகமாக நேசித்திருந்தும். தன் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் கசப்பான அனுபவ த்தினால், அன்னாள் துக்கம் நிறைந்தவளும், விசனப்படுபவளுமாக இரு ந்தாள். நிந்தையான வார்த்தைகளினாலே, மனமடிவாகி, சஞ்சலப்பட்டு, சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். அக்காலத்திலே. சேனைகளின் கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு அவர்கள் வருடந் தோறும் சீலோவாவி லிருந்த ஆலயத்திற்கு சென்று வருவது வழக்கம். அப்படியாக அவர்கள் சென் றிருந்த சமயத்திலே, அன்னாள் ஆலய த்திற்கு சென்று, மனங்கசந்து, மிகவும் அழுது, தன் இருயதத்தை தேவனு டைய சமுகத்திலே ஊற்றி, தன் மனக்கிலேசத்தை கர்த்தரிடம் தெரி வித்து, பிரதி~;டையோடு கர்த்தரிடத்திலே விண்ணப்பம் பண்ணினாள். கர்த்தர் அவள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவளை ஆசீர்வதித்தார். அவள் தன் இருதயத்தை கர்த்தருடைய சமுகத்தில் ஊற்றியதால், கர்த் தர் அதை களிப்புள்ளதாக மாற்றினார். பிற்பாடு அவள் “என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது. என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக் கிறது. என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது. உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோ~ப்படுகிறேன்.” என ஜெபம் செய்தாள். இன்று உங்கள் நிலைமை ஏதோ ஒரு வகையிலே கசப்புள்ள நிலையிலுள் ளதா? வீட்டிலே, உறவுகளுக்கிடையிலே, வேலையிலே, கல்வி நிலைய ங்களிலே, வெளி இடங்களிலே, சபை ஐக்கியத்திலே கசப்பான அனுப வத்திற்குள்ளாக கடந்து செல்ல நேரிடலாம். உங்கள் வாழ்க்கையிலே உள்ள குறைவுகளை சுட்டிக் காட்டி உங்களை மனம் நோகச் செய்ய லாம். அதனால் வாழ்க்கையில் மனச் சமாதானம் இழந்த நிலையிலிரு க்கலாம். சுய பெலத்தினால் அவைகளை மேற்கொள்ள முயற்சி செய் யாதிருங்கள். வன்மம், கசப்பு, வைராக்கியம், பழிவாங்கும் எண்ணம் உங்கள் இருதயத்தில் குடிகொள்ள இடங் கொடாதிருங்கள். கர்த்தரு டைய சமுகத்திலே உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள். வருதப்பட் டுப் பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லாரும் என்னண்டை வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று இயேசு உங்களை அழைக்கின்றார்;. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லா வற்றை யுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்ப டுத்துங் கள். ஆறுதலின் தேவன் சமாதானத்தை உங்களுக்கு அருளுவார்.

ஜெபம்:

விண்ணப்பத்தை கேட்கும் தேவனே, என் இருதயத்தின் வேண்டு தல்களை நீர் அறிவீர். என் வாழ்வின் குறைகளை நிறைவாக்கி, சமாதா னத்தின் பாதையிலே என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:4-6