புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 20, 2020)

இருதயத்தின் இருப்பிடம்

சங்கீதம் 62:10

ஐசுவரியம் விருத்தியா னால் இருதயத்தை அதி ன்மேல் வைக்காதேயுங் கள்.


மாலை வேளையிலே பல விடயங்களைக் குறித்து சம்பாஷனை செய்து கொண்டிருந்த குடும்பத்தினர், அடுத்த மாதம் நாங்கள் வெளிநாட்டிலு ள்ள குறிப்பிட்ட இடத்திற்கு உல்லாசப் பயணம் செல்வோமென முடி வெடுத்தார்கள். காலத்தை தாமதிக்காமல், அடுத்த நாள் காலையிலே பயணத்திற்குரிய விமான பற்றுச்சீட்டுகளை முதல் தர வகுப்பிலே பதிவு செய்தார்கள். பயணத்திற்கு வேண்டிய ஆயத்தங்கள் அனைத்தும் செய்து இர ண்டு நாட்களுக்குள் முடிக்கப்பட்டது. இவை யாவற்றையும், சிந்திக்காமல், துரி தமாக செய்து முடிப்பதற்கு அவர்களிட மிருந்த மிகையான ஐசுவரியம் ஒரு காரணியாக இருந்தது. இப்படியாக “அடுத்த கிழமை ஒரு புதிய உயர் ரக வாகனத்தை வாங்குவோம்”, அடுத்த வருடம் இன்னுமொரு வீட்டை கொள்வனவு செய்வோம்” என்று ஐசுவரியமுள்ளவர்கள் சீக்கிரமான முடிவுகளை எடுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. கருப்பொருளாவது, இது சரி, அது பிழை என்பதல்ல. மாறாக, ஐசுவரியம் அதை உடையவ ர்களுக்கு “நான் எதையும் சீக்கிரமாய் செய்து முடிப்பேன்” என்ற தன் நம்பிக்கையை படிப்படியாக வளரச் செய்துவிடும். தேவனுடைய சமுகத் திலே ஜெபத்திலே தரித்திருந்து தீர்மானங்கள் எடுப்பதும், விசுவாச த்தில் நல்ல போராட்டத்தை போராடுவதும் நாளடைவில் இவர்களைப் போன்றவர்களுக்கு தணிந்து போய்விடும். இதனால் தேவனுக்கு சித்தமில்லாத காரியங்களையும் சீக்கரமாக செய்து முடித்துவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் பல உண்டாகி விடுகின்றது. ஏழைகளும், சாதாரண குடிம க்களும் தங்கள் அன்றன்றாடைய அலுவல்களை கவனிக்க வேண்டியிரு ப்பதால், அவர்கள் நினைத்த காரியத்தை சீக்கிரமாக செய்து முடிப்பதற்கு நிர்வாகம் இல்லாதிருப்பதால், ஐசுவரியம் அவர்களுக்கு கண்ணியாக மாறிவிடுவதில்லை. இன்று ஏழையாக இருப்பவன், நாளை ஐசுவரிய முள்ளவனாக மாறிவிடலாம். நாங்கள் ஏழைகளாக இருந்தாலும், சாதா ரண குடிமக்களாக இருந்தாலும், வசதி நிறைந்தவர்களாக இருந்தாலும், ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயு ங்கள். ஐசுவரியம் இருதயத்தின் காவல்களை உடைத்துப் போடும். ஐசு வரியத்தின் மயக்கமும் தேவனுடைய வசனத்தை நெருக்கிப் போடு கிறதினால், வாழ்க்கை பலனற்றுப் போய்விடும். எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடு ங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்.

ஜெபம்:

அன்பின் தேவனே, உலக செல்வப் பெருக்கினால் உண்டாகக் கூடிய கண்ணிகளை நான் உணர்ந்தறிந்து, அவற்றிலிருந்து விலகிச் செல்லும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 13:22