புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 19, 2020)

நிபந்தனையற்ற அர்ப்பணிப்பு

தானியேல் 3:28

அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொ ரு தேவனையும் சேவி த்துப் பணியாமல், அவ ரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப் புக்கொடுத்ததினால், அவ ர் தமது தூதனை அனுப் பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.


பாபிலோனின், பராக்கிரமமுள்ள ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரினால் யூத ராஜ்யத்தை முற்றுகையிடப்பட்ட போது, தானியேலும் அவனோடு கூட சில வாலிபர்களும், அந்நிய தேசத்து ராஜாவாகிய நேபுகாத்நே ச்சாரின் அரண்மனையில் சேவை செய்யும்படி அடிமைளாக எடுத்துச் செல்லப்பபட்டார்கள்.இவ்விடத்திலே சற்று தரித்து நின்று சிந்திப்போம். நாங்கள் எங்கள் சொந்த தேசத்திலே அநியாயமற்ற நல்வாழ்க்கை வாழ்ந்து வருகின்றோம். அந்த வேளையிலே அந் நிய நாட்டுப் படைகள் வந்து, உங்களை கைப்பற்றிச் சென்றால், அந்த வேளை யிலே தேவனைப் பற்றிய உங்கள் விசு வாசம் எப்படியிருக்கும்? சிலர் இப்படி யான வேளைகளிலே உடனடியாகவே தேவனை தூஷித்து விடுவார்கள். தேவன் எங்களை அடிமைத்தனத்தி ற்கு அனுமதித் திருக்கின்றார். ஆகவே ராஜாவின் அரண்மனை யிலே, ராஜா வின் தயவு கிடைக்கும்படி அவர்களு டைய வழிபாடுகளுக்கு ஒத்துப் போ வோம் என்று இந்த வாலிபர்கள் ஒரு போதும் நினைக்கவில்லை. அந்நிய தேச த்தின் போஜ னங்களாலே தங்களை தீட்டுப்படுத்துவதைக் கூட இவர்கள் விரும்பவில்லை. ராஜா நிறுத்திய சிலையை வணங்க மறுத்தபோது மரண மிரட்டல்கள் வந்தது. எங்கள் தேவன் விடுவித்தாலும், விடுவிக்காமல் போனாலும் நாங்கள் வேறு யாரையும் வணங்கு வதில்லை என்றார்கள். அதாவது, இன்று நாங்கள் இரத்த சாட்சியாய் மரிக்க வேண்டும் என்பது தேவனுக்கு சித்தமானால் அப்படியே ஆகட்டும். ஆனால், நாங்கள் இன்னும் இந்தப் பூமியிலே வாழ்வது அவருக்குச் சித்தமானால் அவர் அப்படியே செய்து முடிப்பார் என்று பலர் முன்னிலையிலே விசுவாச அறிக்கையிட்டார்கள். இந்த பூமி யிலே நிகரில்லாத வல்லமைமிக்க ராஜ்யத்தின் ராஜாவாக, மெய்யான தேவன் ஆளுகை செய்கின்றார் என்பதை உணர்த்தும்படிக்கு தேவனு டைய கையின் கருவிகளாக இவ்வாலிபர்கள் உபயோகிக்கப்பட்டார்கள். அந்நிய தேசத்திலும் தங்கள் இருதயத்தை எல்லாக் காவலோடும் காத் துக் கொள்ள வேண்டும் என்ற வாஞ்சையுடையவர்களாக இருந்த தால், தேவன் அவர்களது மனம் போல அவர்களுக்கு அனுக்கிரகம் செய்தார்.

ஜெபம்:

மகா பராக்கிரமமுள்ள தேவனே, என் வாழ்வின் நிகழ்வுகளால் வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கையை சமரசம் செய்யாதபடிக்கு என் இருத யத்தை காத்துக் கொள்ளும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - தானியேல் 1:8