புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 16, 2020)

கற்றவைகளில் உறுதியாயிருங்கள்

1 பேதுரு 4:4

அந்தத் துன்மார்க்க உ ளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர் கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்.


ஒரு மாணவன், தன் வாலிப பருவத்தை அடைந்த பின்பும், சின்ன வயதிலிருந்து பெற்றோர் கற்பித்து கொடுத்த சுகாதர வழிமுறைகளை கைக்கொண்டு வந்தான். தன் இருப்பிடத்தை சுத்தம் செய்வதிலும், நண்பர்களுடன் வீட்டிற்கு வெளியே சிற்றுண்டிகளை உண்ணும் போது கைகளை கழுவுவதிலும் மிகவும் கவனமுள்ளவனாக இருந்தான். சக மாணவர்களில் பலருக்கு அது ஒரு இடையூறாக தோன்றிற்று. “நீ அவ்வளவு பெலவீனமுள்ளவனோ, எங்க ளைப் பார், நாங்கள் நீ செய்வதைப் போல செய்வதில்லை, அதனால் நோய் கொண்டு ஒடுங்கிப் போனோமோ?” என்று பலவிதமாகவே குறிப்பிடப்பட்ட வாலிபனை கேலி செய்து வந்தார்கள். அவர்கள் என்ன சொன்னாலும், அந்த வாலிபன், தன் ஆரோக்கியமான வாழ் க்கை முறையை விட்டுவிடவில்லை. இந்த உலகத்தின் வேஷம் அப்படியாக மாறிக் கொண்டிருக்கின்ற காலம் இது. அதாவது, பரிசுத்தமான வாழ்க்கை வாழ்பவர்களை பார் த்து எரிச்சலடைந்து அவர்கள் செய்வது ஒரு கேலி கூத்து என்று பலர் கூறிக் கொள்வார்கள். “உனக்கு உல்லாசமாக வாழத் தெரியாது.” “அப் படியானால் நாங்கள் பாவிகளா?” “ஒரு நாள் இப்படிச் செய்வதில் என்ன தவறு?” என்று பரிசுத்த வாழ்க்கை வாழும் மனிதர்களை நெருக்கும் ஒரு சமுதாயத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சென்ற வாழ்நாட் காலத்திலே, கிறிஸ்துவை அறிய முன்பு, இந்த உலகத்தின் போக்கி ன்படி எங்கள் மனம் போன போக்கில், எங்கள் மாம்ச இச்சைகளை நிறை வேற்றும்படி எங்களுக்கு பிரியமானதை நாம் செய்து வந்தோம். எங்கள் இருதயங்களில் பாவ இருள் இருந்தது. ஆனால் இப்போது, நாங்கள் கிறிஸ்து இயேசுவினால் தேவ ஒளியை பெற்றிருக்கின்றோம். எமது மன க்கண்கள் பிரகாசிக்கப்பட்டிருப்பதால், மாம்சத்தின் வாழ்க்கைக்கு உட ன்பட்டவர்கள் அல்லர். இதை காண்கின்ற மற்றவர்கள், நாங்களும் தங்க ளைப் போல இந்த உலக போக்கிற்கு நாம் உடன்படாமல் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, எங்களை தூஷிக்கின்றார்கள். நீங்கள் அந்த வாலிபனைப்போல கற்றதில் உறுதியாயிருங்கள். எந்த ஒரு விஷயத்திலும் உங்கள் பரிசுத்த வாழ்வை சமரசம் செய்யாமல், உங்கள் இருயத்தில் விதைக்கப்பட்டிருக்கும் ஜீவவார்த்தையாகிய வித்தை காத்துக் கொள்ளுங்கள். கர்த்தர் அதை வளர்ந்து, பெருகி, விளையச் செய்வார்.

ஜெபம்:

வெற்றி சிறக்கச் செய்யும் தேவனே, இந்த உலகத்தினால் உண் டாகும் நிந்தையான பேச்சுக்களினால் என் தூய வாழ்க்கையைவிட்டு வில கிப்போகாதபடிக்கு என் இருதயத்தை காத்துக் கொள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 1:18