புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 15, 2020)

உன் இருதயத்தைக் காத்துக்கொள்

நீதிமொழிகள் 4:23

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.


பராக்கிரமமுள்ள சக்கரவர்த்தி ஒருவன் தன் ராஜ்யத்திற்கென்று ஒரு கோட்டையைக் கட்டினான். அவன் பராக்கிரமமுள்ளவனானதால், எவ ரும் எதிர்த்து வரட்டும் நான் ஒரு பாடம் படிப்பிப்பேன் என்று கூறி பாதுகாப்பு அரண்களை போடாமல் விட்டுவிடவில்லை. கோட்டையை சுற்றி பெருஞ் சுவரை உண்டு பண்ணி னான். கோட்டையை சுற்றி பெரும் அக ழியை உண்டு பண்ணினான். கோட்டை வாச லுக்கு தூக்கு பாலத்தை (னசயற டிசனைபந) செய்வித்தான். கண்ணுக்கெட் டிய தூர மளவும், கோட்டையை சுற்றி மைதான வெளியாக்கினான். இப்படி யாக தன்னால் செய்யக்கூடிய பாதுகா ப்புக்கள் யாவையும் செய்து முடித் தான். ஆனால், கோட்டையை சுற்றியி ருந்த தாணையங்களில், தெற்குப் புறமாக இருந்த தாணையப் பகுதிக ளிலே எதிரிகளின் தொல்லை அதிகமாக இருந்தது. அதனால் அந்த சக்கரவர்த்தி, அந்த தாணையத்தை தகர்த்துவிடவில்லை. அங்குள்ள குறைவு என்னவென்று அறிந்து, அந்த தாணையத்தை இன்னும் அதிகமாகப் பெலப்படுத்தினான். இதற்கொத்ததாகவே எங்கள் வாழ்க் கையும் இருக்க வேண்டும். எங்கள் இருதயம் அந்தக் கோட்டையைப் போன்றது. அதைத் தாக்கி, அதற்குள்ளே களைகளை விதைத்துவிடு வதே எதிரியின் நோக்கமாக இருக்கின்றது. எனவே, இயேசு கிறிஸ்து வழியாக பாவத் திலிருந்து மீட்பை பெற்ற நாம் விழிப்புள்ள வாழ்க்கை வாழ வேண்டும். சர்வவல்ல தேவன் என்னோடு இருக்கின்றார் எனவே ஒன்றும் என்னை அணுக முடியாது. ஆகவே, நான் விரும்பிய இடத்திற்கு, வேண்டிய நேரத்திலே போவேன், விரும்பினதைப் பார்ப் பேன், எதையும் வேண்டியபடி பேசுவேன் என்று வாழக் கூடாது. எங்கள் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கின்ற வேத வார்த் தைகளின்படி எங்கள் பாதுகாப்பு அரண்களை நாங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அப்போது எதிரியின் சூழ்ச்சிகள் எங்களை மேற் கொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக சபை ஐக்கியம் மற்றும் உதவி ஊழியங்களிலே அதிக போராட்டம் உண்டு, பிரச்சனைகள் அதிகமாக வருகின்றது என்று அவைகளை விட்டுவிடாமல், வேத வார்த்தை களி ன்படி ஜெபத்தினாலே போராட்டங்களையும், சவால் களையும், பிரச்ச னைகளையும் ஜெயம் கொள்ள வேண்டும். சுற்றியுள்ள தீமைகளைக் கண்டு நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, என் வாழ்க்கையில் வரும் போராட்டங்களை கண்டு சோர்ந்து போய், பாதுகாப்பு அரண்கள் தகர்ந்து போய்விடாதபடிக்கு என்னை பெலப்படுத்தி நடத்திச் செல்வீராக, இர ட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - 1 தெச 5:22