புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 14, 2020)

தீட்டுப்படுத்தும் காரணிகள்

மாற்கு 7:20

மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.


எங்கள் இருதயத்தை எல்லா காவலோடும் காத்துக் கொள்ள வேண்டும் என்று சத்திய வேதம் கூறுகின்றது. எவற்றிலிருந்து இருதயத்தைக் காத் துக் கொள்ள வேண்டும்? இருதயத்திலிருந்து புறப்பட்டு வெளிவரக் கூடி யதும், மனிதனை தீட்டுபடுத்துவதுமுமான காரியங்கள் எவை? 1. பொல் லாத சிந்தனைகளும், 2. விபசாரங்களும், 3. வேசித்தனங்களும், 4. கொலைபாதகங்களும், 5. களவுகளும், 6. பொருளாசைகளும், 7. து~;டத்தன ங்களும், 8. கபடும், 9. காமவிகாரமும், 10. வன்கண்ணும், 11. தூ~ணமும், 12. பெருமையும், 13. மதிகேடும் புறப்பட்டு வரும் என்று எங்கள் கர்த்தராகிய இயேசு கூறியிருக்கின்றார். (மாற்கு 7:21-23). இவைகளை தூண்டிவிடக் கூடிய காரணிகள் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எங்கே சென்று வருகின்றோம். எவ்விடங்களை நான் தவிர்த்துக் கொள்ளலாம்? எவைகள் என் கட்டு ப்பாட்டிற்கு மிஞ்சி இருக்கின்றது? பொல்லாத சிந்தனைகளை தூண்டி விடும் வீட்டில் இருக்கும் காரணிகள் என்ன? என் இருதயத்தை உண ர்வற்றுப்போக வைக்கும் காட்சிகள் என்ன? என்னை பாவ சோதனை க்கு இட்டுச் செல்லும் நட்புகளும் உறவுகளும் என் வாழ்வில் உண்டா? நான் சென்று வரும் இடங்கள் தேவனுக்கு பிரியமானவைகளா? நான் பார்க்கும் காட்சிகள், கேட்கும் வார்த்தைகள், பேசும் வசனங்கள், வாசி க்கும் புத்தகங்கள் என்னை பக்திவிருத்தியடைச் செய்கின்றதா? ஒரு வேளை மேற்கூறிய 13 காரியங்களில் பல கேட்பதற்கு கடினமானதாக இருக்கலாம். ஆனால் இவைகளை பாராமுகமாக விட்டுவிட முடியாது. கர்த்தர் விருதாவாய் பேசுவதில்லை எனவே அவருடைய வார்த்தையை குறித்து நாங்கள் மிகவும் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, தினமும் ஆகாத காட்சிகளை இன்ரநெற் ஊடகங்கள், தொலைகாட்சி மற்றும் திரைப் படங்களில் பார்போமெ ன்றால் அது எங்கள் வாழ்க்கையின் வழக்கமான நிகழ்வாக மாறிவிடும். முடிவிலே அவை பரிசுத்தத்தை குறித்த உணர்வை எங்கள் இருதயத்திலிருந்து அற்றுப் போகச் செய்துவிடும். அவை எங்கள் பெலவீன நேரங்களிலும், வாழ்வின் போராட்டங்களிலும், சவால்களை எதிர்நோக்கும் வேளைக ளில் எங்களை பாவம் செய்ய தூண்டிவிடும். மேற்கூறிய காரியங்களை உங்கள் வாழ்வில் கொண்டுவரக்கூடிய காரணிகள் (மனிதர்கள், பொருட்கள், இடங்கள) யாவையும் உங்கள் வாழ்விலிருந்து அகற்றி விடுங்கள். தேவ ஆவியானவர் தாமே உங்களுக்கு உதவி செய்வார்.

ஜெபம்:

பரலோக தேவனே, உமக்கெதிராக பாவம் செய்யும்படிக்கு என்னைத் தூண்டிவிடும் காரணிகளை பாராமுகமாக விட்டுவிடாமல், என்னை விட்டு முற்றிலும் அகற்ற எனக்கு பெலன் தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:16