புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 13, 2020)

என் வாஞ்சை எங்கே?

மத்தேயு 6:21

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இரு க்கும்.


மோட்டார் வண்டிகளைக் குறித்த ஆசையுள்ள சிறு பையன், பல வகை யான விளையாட்டு மோட்டார் வண்டிகளை சேகரித்து வந்தான். பிறந்த தினத்திற்கு என்ன பரிசுப் பொருள் வேண்டும் என்று கேட்டால், தன்னி டத்திலில்லாத விளையாட்டு மோட்டார் வண்டியே வேண்டும் என்று சொல்லிக் கொள்வான். ஐம்பதிற்கு மேற்பட்ட மோட்டார் விளையாட்டு வண்டிகளை வைத்திருந்த போதும், அவற்றை நேர்த்தியாக அடுக்கி வைத்து, ஒவ்வொரு நாளும் பராமரி த்து வருவான். ஆதிகபடியான ஓய்வு நேரத்தை, அந்த மோட்டார் வண்டிகளுடன் விளையாடுவதிலும், அதைக் குறித்து தன்னுடைய நண்பர்களுடன் பேசுவதிலும் செலவு செய்வான். இதை பொழுது போக்கு என்று மனி தர்கள் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் அந்த சிறு பையனின் வாழ்க் கையிலே விளையாட்டு மோட்டார் வண்டிகள் அவனுக்கு பொக்கிஷமாக இருந்தது. அதுபோலவே, பெரியவர்களாகிய எங்களின் வாஞ்சை எங்கே இருக்கின்றது என்பதை நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எங்கள் ஆசை எதை பற்றியிருக்கின்றதோ அங்கே எங்கள் இருதயம் இருக்கும். இது தேவனுடைய வார்த்தை. பூமிக்குரியவைகளை நாடித் தேடுகினறவர்களின் பொக்கிஷம் பூமியிலே இருக்கும். பரலோகத் திற்குரியவைகளை நாடித் தேடுகின்றவர்களின் பொக்கிஷம் பரலோக த்திலே இருக்கும். “பூமியிலே உங்களுக்குப் பொக்கி~ங்களைச் சேர் த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக் கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியா வது துருவாவது கெடுக்கிறதும் இல்லை. அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.” என்று இயேசு கூறியிருக்கி ன்றார். எதை நாங்கள் சேர்த்து வைத்திருக்கின்றோம்? இதை தினமும் நான் செய்ய வேண்டும், இன்னும் அதிகம் வேண்டும் என்று எதை குறித்த வாஞ்சை எங்கள் வாழ்வில் பெருகுகின்றது? பிரியமானவ ர்க ளே, பரலோகத்திற்குரிய மேன்மையான தேவ சித்தத்தையும் செய்வ தைக் குறித்த வாஞ்சையே எங்களில் தினமும் பெருக வேண்டும். அப்போது எங்கள் இருதயம் பரலோகத்தை குறித்ததாயிருக்கும்.

ஜெபம்:

நிலையான வாழ்க்கைக்கு என்னை தெரிந்து கொண்ட தேவனே, பரலோகத்தையும், உம்முடைய சித்தத்தையும் இந்த பூவுலகிலே நிறைவேற்றும் வாஞ்சையும் என்னில் பெருக கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 13:44