புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 11, 2020)

மேன்மக்கள் கீழ்மக்கள்

சங்கீதம் 62:11

தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே.


சுகதேகியும் பெலசாலியுமாயிருந்த மனிதனானவன், எவரைக் குறித்தும் பயமற்றவனாக இருந்து வந்தான். அவன் வாழ்ந்து வந்த ஊரிலே அவன் ஒரு பெலசாலி என்று மனிதர்கள் அறிந்திருந்தார்கள். அந்த மனிதன் தன் பெலத்தில் அதிக நம்பிக்கை வைத்திருந்தான். பல ஆண் டுகள் கடந்து சென்ற பின்பு, அவன் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு சம்ப வத்தினாலே, தன் பெலத்தினால் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது என்பதை திட்டமாக அறிந்து கொண் டான். பெலமுடையவர்கள் தங்கள் பெலத்தைக் குறித்து மேன்மை பரா ட்டாமல் இருப்பது கடினம். சாதாரண குடிமக்களாக இருந்தாலும், பிரபுக்க ளாக இருந்தாலும், தங்களுக்கு இரு க்கும் உலக மேன்;மையை குறித்து மற்றவர்களுடன் பேசாவிடினும், அவ ர்கள் மனதிலே தங்கள் மேன்மையைக் குறித்த நம்பிக்கை ஒட்டிக் கொள்ளும்;. இந்த உலகிலே கீழ்மக்கள் என்று கருதப்படுகின்றவர்கள் காற்றைப் போல மாறிவிடுவார்கள். உலக அந்தஸ்தினால் மேன்மக்கள் என்று கருதப்படுகின்றவர்கள், தங்கள் கௌரவத்தை காக்கும்படி தங்கள் வார்த்தையை நிறைவேற்ற எத்த னித்தாலும் அவர்களை நம்பி இருக்கின்றவர்கள் ஏமாற்றமடைந்து போ வார்கள். மேன்மக்கள் பொய்யுமாமே. தராசிலே வைக்கப்பட்டால் அவர் களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள். எனவே, “கீழ்மக்கள் மா யையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர் களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள்.” (சங்கீதம் 62:9). “பிரபுக் களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங் கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்பு வான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” நாங்கள் பிரபு க்கள் என்று கருதப்பட்டாலும், சாதாரண மனுப்புத்திரனாக இருந்தாலும், வல்லமை தேவனுடையது! அவர் சொல்ல அகும் அவர் கட்டளையிட நிற்கும். கிருபையும் தேவனுடையது. அவரே அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கின்றவர் என்னும் சத்திய வார்த்தைகளை ஒரு போதும் மறந்து போய்விடக் கூடாது. எங்கள் வாழ்வில் உண்டாகும் உய ர்விலும், தாழ்விலும் தேவனுடைய ஆளுகையை அறிக்கையிட வேண் டும். இந்த உலகம் உங்களை குடிமக்களாகவோ அல்லது பிரபுக் களா கவோ தரப்படுத்தலாம் ஆனால் எவை எப்படியாக இருந்தாலும் நீங் கள் தேவனுடைய மக்கள் என்பதை மறந்து போய்விடாதிருங்கள்.

ஜெபம்:

என்றென்றும் மாறாத தேவனே, இந்த உலகத்தின் பாகுபாடுகளில் சிக்கி, நீர் என்னோடு இருக்கும் மேன்மையை மறந்து போய்விடாதபடிக்கு, உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - சங்கீதம் 146:3-4