புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 10, 2020)

திறந்த வாசல் உனக்கு முன்பு

மத்தேயு 25:10

ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியா ண வீட்டிற்குள் பிரவேசித் தார்கள்; கதவும் அடைக்க ப்பட்டது.


“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;. ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளு கிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனு க்குப் பாம்பைக்கொடுப்பானா? ஆகை யால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவு களைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள் ளுகிறவர்களுக்கு நன்மையானவைக ளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” என்று இயேசு கூறியி ருக்கின்றார். இது கிருபையின் காலம், ஞான நன்மைகளை கேட்டு பெற்றுக் கொள்ளும் காலம். தேவனை தேடி அவருடைய அறிவிலே வளருகின்ற காலம்,இது மனக் கண்கள் விழித்திருக்கும் காலம். இது உணர்வடையும் காலம். திறந்த வாசல் எங்களுக்கு முன்பாக இருக்கும் காலம். அந்த வாசல் அடைபடும் நாள் ஒன்று உண்டு. அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொ ண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவ ர்களுமாயிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோ கவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். நடுராத்திரி யிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. புத்தியில்லாதவர்கள், புத்திதெளிந்து எண்ணெய் வாங்கும்படி இருளான நேரத்தில் விற்கிற வர்களிடத்திற்கு சென்றார்கள். இது காலம் கடந்த ஞானம். மணவாளன் வந்தபோது, ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பிரியமானவ ர்களே, திறந்த வாசல் உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கின்றது. எனவே ஞானமுள்ளவர்களாய் நடந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, திறவுண்ட வாசல் அடைபட முன்பு, ஞானமுள்ள பிள்ளைகளைப்போல உணர்வுள்ள வாழ்க்கை வாழும்படிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - வெளி 3:8