புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 08, 2020)

மன்னிக்க முடியாத குற்றம்?

யோவான் 16:13

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;


“எதற்கும் ஒரு அளவு உண்டு ஆனால் இவன் எல்லையை மீறிவிட்டான். இவனோடு எனக்கு ஒரு பாகமும் இல்லை பங்குமில்லை. இது மன்னிக்க முடியாத குற்றம்.” என்று தன் உடன் சகோதரனைக் குறித்து ஒரு மனிதனானவன் தன் போதகரிடம் கூறினான். அப்படி அவன் என்ன துரோகம் செய்தான் என்று போதகர் தயவாய்க் கேட்டார். அந்த மனிதனானவன், தன் உடன் சகோதரன் தன் குடும்பத்திற்கு செய்த துரோகத்தை போதகருக்கு விளக்கிக் கூறினான். மகனே, அவன் செய்த குற் றம் பாரதூரமானது. கேட்பதற் கும், ஜீரணிப்பதற்கும் கடினமானது. இப்படி யாகவே, 2000 வருடங்களுக்கு முன்ன தாக, பாவிகள் என்று தள்ளப்பட்ட ஒரு கூட்ட ஜனங்கள் இருந்தார்கள். இவ ர்களில் பலர் மதத்தலைவர்களால் (சதுசேயர், பரிசேயர், வேதபாரகர்) புறக்கணிக்கப்பட்டிருந்தா ர்கள். அவர்கள் நிஜமாகவே பாவிகளாக இருந்தார்கள். அவர்களில் சிலர் அந் நாட்களிலிருந்த சட்டப்படி கல்லெறிந்து கொலை செய்யபடுகிறதிற்கு பாத்திரராயிருந்தார்கள். ஆனால் அவர்களை புறக்கணித்த மற்றய ஜன ங்கள் யாவரும் நித்திய மரணத்தை நோக்கிப் போய் கொண்டிருக் கின்றோம் என்பதை மறந்து, பாவிகளாக இருந்த இந்த ஜனங்களின் மேல் இன்னும் சுமைகளை ஏற்றினார்கள். (மத்தேயு 23:4). எங்கள் எஜ மானனாகிய இயேசு இனி மன்னிப்பில்லை, இனி வழியில்லை என்று இருந்த இந்த ஜனங்களையே தேடிவந்தார். அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருப்பதைக் கண்டு மனதுருகினார். பாவிகள் என்று அழைக்கப்பட்ட இவர்களுக்கும், தங்களை பரிசுத்தர்கள் என்று எண்ணி அறியாமையி லேயே வாழ்ந்து வந்த அவர்களுக்கும் மீட்பு உண்டாகும் வழியை உண்டு பண்ணினார். தம்மை மரண ஆக்கினைக் குள்ளாக்கினவர்களின் பாவத்தையும் தன்மேல் சுமந்தார். மன்னிப்புப் பெற தகுதியற்ற என் மேலும், உன் மேலும், மனிதர்கள் யாவரின் மேலும் உன்னத அன்பை ஊற்றினார். மனிதனால் கூடாததை வாய்க்கச் செய்யும் கர்;த்தர் எங்க ளோடு இருக்கின்றார். ஒரு வேளை உன் உடன் சகோதரனின் துரோக த்தை உன் பெலத்தினால் மன்னிக்க முடியாதிருக்க லாம். இனி வழியி ல்லையென்று இருந்த எங்களுக்கு வழியை உண்டாக்கிய இயேசுவை நோக்கிப் பார். சத்திய ஆவியானவருக்கு இடம் கொடு. உன்னால் செய்ய முடியாததை செய்யும்படி பெலனைத் தந்தருள்வார்.

ஜெபம்:

முடிவில்லா வாழ்விற்கு என்னை அழைத்த தேவனே, நீர் தந்த மீட்பிற்கு நன்றி. என்னால் செய்ய முடியாத நற்கிரியையை செய்து முடிக்க எனக்கு பெலன் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 5:32