புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 07, 2020)

அச்சடையாளங்கள்

கலாத்தியர் 6:17

கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத் திலே தரித்துக்கொண்டிருக்கிறேன்.


“அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்று குறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்;. மூன்றுதரம் மிலாறு களால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்க ளிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண் டான மோசங்களிலும், கள்ளச்சகோ தரரிடத்தில் உண்டான மோசங்க ளி லும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வா ணத்திலும் இருந்தேன். இவை முதலா னவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிரு க்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.” என்று தேவ ஊழி யராகிய பவுல்; கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் நிமித்தம், கிறிஸ்துவின் அச்சடையாளங்களை தரித்தவராக வாழ்ந்து வந்தார். இயேசு கிறிஸ்து எப்போதும் பரிசுத்தராகவே இருக்கின்றவர். அவருடைய சாயலை தரித் துக் கொள்ளும்படிக்கு, பவுல் தன்னுடைய உள்ளான மனிதனிலும், சரீ ரத்திலும் கிறிஸ்துவின் அச்சடையாளங்களை தரித்துக் கொண்டிருந்தார். கிறிஸ்து தன்னில் வெளிப்படும்படிக்கு நன்மை செய்து பாடனுபவித்தார். பல பாடுகள், துன்பங்கள், அவமானங்கள், நிந்தைகள் மத்தியிலும், எந்த முறுமுறுப்புக்கள் இல்லாமல், தன்னை அழைத்த இயேசுவைப் போல, அழைப்பின் நோக்கத்தை நிறைவேற்றும்படிக்கு பிரயாசப்பட் டார். எம் வாழ்க்கையிலும் நாம் கிறிஸ்துவின் சாயலை அணியும்படிக்கு உள்ளான மனிதனிலும், கர்த்தருக்கு சித்தமானால் எங்கள் சரீரத்திலும் கிறிஸ்துவின் அச்சடையாளங்களை தரித்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்துவை அறியும் மேன்மைக்காக, அவமானங்கள், நிந்தைகள், நம் பிக்கைத் துரோகங்கள் யாவையும் சகித்துக் கொள்ளவும், அப்படிப்ப ட்ட வேளைகளிலே எங்களை துன்பப்படுத்துகின்றவர்ளுக்காக ஜெபிக்க வும் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவின் சாயலை அணிந்து கொள்ளும்படிக்கு, பாடுகளை சகித்துக் கொள்ளும் பெலனை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 11:23-28