புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 06, 2020)

நாங்கள் யார்?

லூக்கா 23:34

அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.


கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்த பொ ழுது, அங்கே இயேசுவையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்ற வாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: தேவாலயத்தை இடித்து, மூன்று நாளை க்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இற ங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள். அப்படியே பிரதான ஆசாரி யரும் வேதபாரகரும் மூப்பரும் பரியா சம்பண்ணி: மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவை யிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக் கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். இப்படியாக மீட்பராகிய இயேசு கிறிஸ்துதாமே அசட்டை பண்ணப்பட்டவராக சிலுவையிலே தொங்கி னார். இன்னும் சில மணித்தியாலங்களுக்குள் இவர் மரித்து விடுவார், ஆதலால், இவர் கூறும் வார்த்தைகளோ சுற்றயிருந்தவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. ஆனால் அந்த வேளையிலும், இயேசு தாமே, சூழ்நிiலைகளை கண்டுகலங்காமல், தனக்கெதிராக இப்படிப் பட்ட கொடுமைகளை செய்பவர்களுக்காக, தம்முடைய பிதாவை நோ க்கி பரிந்து பேசி ஜெபித்தார். அவர்கள் அறியாமையை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டார். இது தேவ குமாரனுடைய குணாதிசயத்தின் அடையாளம். துன்ப வேளைகளிலும், மரிக்கும் தறுவாயிலும் திவ்விய குணாதிசயமே அவரில் வெளிப்பட்டது. சில வேளைகளிலே, இந்த உல கிலே நாங்கள் அற்பமானவர்களாக கணிக்கப்பட்டிருக்கலாம். எங்களு டைய வார்த்தைகள் மற்றவர்களுக்கு நகைப்புக்குரியதாக இருக்க லாம். எங்களுடைய ஜெபம், எங்களுடைய பரிந்து பேசுதல் மற்றவர்களுக்கு அற்மாக இருக்கலாம். ஆனால், சூழ்நிலைகளைக் கண்டு, பயந்து, நாங்கள் சர்வ வல்ல தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கின்றோம் என்பதை நாங்கள் மறந்து போய்விடக் கூடாது. தேவ பிள்ளைகளின் அடையாளம் எங்களில் எப்போதும் காணப்பட வேண்டும்.

ஜெபம்:

அழைத்த தேவனே, இந்த உலகத்தின் அளவுகோலின்படி நாங்கள் அற்பமாக எண்ணப்பட்டாலும் நாங்கள் உம்முடைய பிள்ளைகள் என்பதை ஒரு போதும் மறந்துவிடாதபடிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:5