புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 05, 2020)

நற்கிரியைகளின் அடையாளங்கள்

1 பேதுரு 3:17

தீமைசெய்து பாடநுபவிப் பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மை செய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.


உங்கள் கழுத்தின் பின் புறமாக இருக்கும் அந்த பெரிதான தழும்பு எப்படி ஏற்பட்டது என்று மகனானவன் தன் தந்தையாரிடம் கேட்டான். மகனே, சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, வீட்டில் ஏற்பட்ட தீயில் இருந்து உன்னை காப்பாற்றும்படி அறைவீட்டிற்குள் சென்ற போது என் முதுகில் பெரிதான எரிகாயம் ஏற்பட்டது என்று தந்தையார் கூறினார். அந்த தந்தையார் முதுகில் ஏற்பட்ட தழும்பானது, தன்னுடைய மகனைக் குறித்த தன் உள்ளத்திலிருந்த அன்பை வெளிப்படுத்தும் அடையாளச் சின்னம். அந்தத் தழும்பானது மற்றவர்களுடைய பார்வைக்கு விரும்பப்படத்;தகாததொ ன்றாக இருந்தாலும், அது தகப்பனுக் கும் மகனுக்கும் இடையிலுள்ள பிணை ப்பை பெலப்படுத்துகின்ற அடையாள மாக இருந்து வந்தது. எங்கள் தந்தை யாகிய பிதா, தம்முடைய அன்பை வெளிப்படுத்தும் அடையாளமாக தம்முடைய குமாரனாகிய இயேசுவை எங்களுக்குச் தந்தார். குமாரனா கிய இயேசு, பிதாவின் சித்தத்தை பூரணமாக வெளிப்படுத்தும்படிக்கு, எந்த நிபந்தனையும் இன்றி தம்மை மரண பரியந்தம் ஒப்புக் கொடு த்தார். எங்கள் மேல் கொண்ட அன்பை இயேசு வெளிப்படுத்தும்படிக்கு தம்முடைய சரீரத்திலே அவர் பல பாடுகளை ஏற்றுக் கொண்டார். எங் கள் இருதயத்தில் தேவ அன்பானது நாளுக்கு நாள் வளர்ந்து பெருக வேண்டும். தேவ அன்பு என்று சொல்லுகின்ற வேளையில், அதன் அடை யாளங்கள் எங்கள் உள்ளும் புறமும் காண்பிக்கப்பட வேண்டும். அதா வது, நாங்கள் எங்கள் சரீரத்தில் தழும்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பது பொருள் அல்ல. நாங்கள் கிறிஸ்துவின் நிமித்தம் ந~;டத்தை சகிக்கின்றவர்களாக இருக்க வேண்டும். கிறிஸ்துவின் நிமித்தம் நாங்கள் செய்யும் தியாகங்களின் அடையாளங்கள் என்ன என்பதை ஆராய்ந்து பாருங்கள். தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமா னால், நன்மை செய்து பாடநுபவிப்பதே மேன்மையா யிருக்கும். ஏனெ னில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர் களுக்குப் பதிலாக நீதிபரராகிய அவர் நம்முடைய பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். நாமும் மற்றவர்களை கிறிஸ்துவினிடத்தில் சேர்க் கும்படிக்கு எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும். தேவனு டைய பிள்ளைகளின் அடையாளங்களை உங்களில் வெளிப்படுத்துங்கள்.

ஜெபம்:

அன்புள்ள பரலோக பிதாவே, உம்முடைய பிள்ளை என்கின்ற சிலாக்கியத்தை பெற்ற நான், உம்முடைய பிள்ளைக்குரிய அடையாளங் களை வெளிப்படுத்தும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 2:14-17