புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 03, 2020)

தேவனுடைய சுதந்திரர்கள்

கலாத்தியர் 4:7

ஆகையால் இனி நீ அடி மையாயிராமல் புத்திரனா யிருக்கிறாய் நீ புத்திரனே யானால், கிறிஸ்துமூல மாய் தேவனுடைய சுதந் தரனாயுமிருக்கிறாய்


முற்காலங்களிலே, அடிமைகளாக விலைகொடுத்து வாங்கப்பட்டவர்க ளின் சரீரத்திலே, அவர்கள் இன்னாருடையவர்கள் என்று அறியும்படிக்கு, அவர்களுடைய எஜமானனானவன், ஒரு அடையாளத்தை அவர்கள் மேல் பொறித்துக் கொள்வது வழக்கம். அப்படிப்பட்ட அடையாளம் அடிமைகளாக கொள்ளப்பட்டவர்களின் விருப்பப்படியல்ல, நிர்பந்தத் தின் அடிப்படையிலே ஏற்படுத்தப்ப ட்டது. அவ்வண்ணமாகவே நாமெல் லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம் சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்க ளைப்போலக் கோபாக்கினையின் பிள் ளைகளாயிருந்தோம். இருளின் அதிகா ரியாகிய பிசாசானவனின் அடையாள ங்களை எங்களுக்குள் தரித்தவர்களாக இருந்தோம். அவைகளை பெருமிதத் தோடு அணிந்து வந்தோம். எங்கள்மேல் அன்புகூர்ந்த பிதாவாகிய தேவன் தாமே, தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை எங்களுக்காக அனுப்பினார். குமாரனாகிய இயேசுதாமே தம்மையே ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்து, எங்கள் பாவத்திற்குரிய பரிகாரத்தை சிலுவையிலே செய்து முடித்து, இருளின் அதிகாரத்திலிருந்து விடு தலையாகும்படி எங்களை அழைத்தார். பாவ இருளின் அடிமைத்தனத் தின் அடையாளங்களை எங்களை விட்டு அகற்றி, தேவ ஆவியினாலே, உன்னதத்திலிருந்து வரும் தேவ பிள்ளைகளுக்குரிய தம்முடைய அடை யாளத்தை எங்களிலே தரிப்பித்தார். முற்காலங்களிலே, விலைகொடு த்து வாங்கப்பட்ட அடிமைகள் தங்கள் எஜமான்களினாலே நிர்பந்திக்க ப்பட்டார்கள். ஆனால் இந்த அழைப்பு நிர்பந்தத்தினால் உண்டானது அல்ல. இயேசு கிறிஸ்து தாமே, தம்முடைய விலைமதிக்க முடியாத இரத்தத்தினாலே தம் வழியாக மீட்பின் பாதையை உண்டாக்கி, அதை தெரிந்து கொள்ளும் சுயாதீனத்தை எங்களிடம் கொடுத்தார். பாவத்தின் அடிமைளாக இருந்த எங்ளுக்காக, எஜமானனாகிய இயேசு கிறிஸ்து ஈடு இணையில்லாத விலையை கொடுத்து மீட்பை உண்டு பண்ணி னார். எனவே தேவ பிள்ளைகளின் அடையாளம்; தரிப்பிக்கப்பட்டிரு க்கும் நாங்கள் அடிமைத்தனத்தின் அடையாளங்களை களைந்து விட்டு, மனநிறைவோடு, தேவனுடைய அநாதி தீர்மானம் நிறைவேறும்படி கிறி ஸ்துவின் அடையாளங்களை நம் இருதயங்களில் தரித்துக் கொள்வோம்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, நாங்கள் உம்முடைய சுதந்திரர்களாக இருக்கும்படிக்கு, இருளின் அடையாளத்தை களைந்து உம்முடைய பிள் ளைகளுக்குரிய அடையாளத்தை தரித்துக் கொள்ள கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:1-7