புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 02, 2020)

என்னிடத்தில் உள்ளவைகள்

அப்போஸ்தலர் 3:6

என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்;


ஒரு சமயம், இயேசு கிறிஸ்துவின் இரண்டு சீ~ர்களாகிய பேதுருவும், யோவானும் ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே தேவால யத்துக்குப் போனார்கள். அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனு~ னைச் சுமந்து கொண்டுவந்தவர்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்க ளிடத்தில் பிச்சை கேட்கும்படி, அவ னை நாடோறும் அலங்கார வாசல் என் னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். அவன், தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுரு வையும் யோவானையும் கண்டு பிச்சைகேட்டான். பேது ருவும் யோ வானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர் களை நோக்கிப்பார்த்தான். அப்பொழுது பேதுரு: வெள் ளியும் பொன் னும் என்னிடத்திலில்லை. என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி, வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உட னே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்து க்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். “என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்.” என்ற வார்த்தையை சற்று எங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு சிந்தித்துப் பாருங்கள். எங்களு டைய வாழ்கையிலே, காடும், மலையும், பள்ளத்தாக்கும், வனாந்திரமும் போன்ற வேளைகளிலும், வளமான, ஆரோக்கியமான, செழிப்பான வேளைகளிலும் எங்களோடு இருப்பவர் இயேசு. அவருடைய சாயலை தரித்துக் கொண்டிருக்கும் நாங்கள் அந்த தேவசாயலுக்குரிய சுபாவங் களை மற்றவர்களுக்கு காண்பிக்க வேண்டும். அன்றைய உலகிலே வாழ்ந்த இயேசுவின் சீ~ர்களிடம் இந்த உலகத்தின் ஐசுவரியங்கள் இரு க்கவில்லை. மதத்தலைவர்கள் மத்தியில் ஒரு பொருட்டாக எண்ணப்ப டவும் இல்லை. ஆனால் அவர்களிடமிருந்தவைகள் இயேசுகிறி ஸ்துவி னுடைய நாமமும் அவருடைய நாமத்திதைப் பற்றும் விசுவாசமும் பர லோகத்திலிருந்து கொடுக்கப்பட்ட அழியாத ஈவுகளுமே. முற்காலத்தில் நாங்கள் அந்தகாரத்துக்குரியவர்களாக இருந்தோம். இப்பொழுதோ கர் த்தருக்குள் வெளிச்சமாயிருக்கும்படி ஏற்படுத்தப்பட்டுள்ளோம். ஆகை யால், வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுவோம். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்தவரே, நெருக்கடியான நேரத்திலும், என்னிடத்திலிருக்கும் உம்முடைய சுபாவங்களை வெளிக் காட்டும்படிக்காய் எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தாரும்.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:7-14