புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 01, 2020)

தேவன் தரும் பெலத்தால்

ரோமர் 12:8

பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முத லாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற் சாகத்துடனே செய்யக்கடவன்.


அநேக வருடங்களாக கிராமத்திலே ஊழியம் செய்து வந்த வயதான போதகர், பல க~;டங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் மத்தி யிலும் மனம் தளர்ந்து போகாமல், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தின் மேலுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருந்து வந்தார். தன்னைச் சூழ உள்ள வறுமைக் கோட்டிற்குள் வாழும் ஜனங்களுக்கு, பண உதவியை யோ அல்லது சரீர உதவிகளையோ அவ ருக்கு அதிகமாய்ச் செய்ய முடியவி ல்லை. தன்னைச் சூழ இருக்கின்றவர்க ளின் தேவைகள் சந்திக்கப்பட வேண் டும் என்பதே அந்த வயதான போதகர் ஐயாவின் தேவையாக இருந்தது. “கர்த் தாவே, ஏழைகளுக்கு உதவி செய்ய நீர் எனக்கு பணத்தைத் தாரும்” என்று அவர் ஜெபித்ததில்லை. மாறாக “என் தேவன் தம்முடைய ஐசுவரிய த்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவா க்குவார்.” என்கின்ற வாக்குத்தத்தத்தில் அவர் மிகவும் உறுதியாய் இருந்தார். தன்னைச் சூழ உள்ள மற்றவர்களுக்காக தேவ வார்த்தையின்படி ஊக்கமாக ஜெபித்து வந்தார். அவர்களின் தேவைகள் சந்திக்கப்படும் போது வயதானவரின் உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். மற்ற வர்களுடைய தேவைகள் எவர்வக;டாக சந்திக்கிக்கப்படுகின்றதென் பதைக் குறித்து அவர் பெரிதும் அலட்டிக் கொள்ளவதில்லை. தேவனா கிய கர்த்தர், தக்க சமயத்தில் தம்முடைய சித்தத்தின்படி தேவவைக ளை சந்திப்பார் என்பதே அவருடைய விசுவாசம். மற்றவர்களுக்கு உதவி செய்யும்படி தன்னிடத்தில் பணம் இல்லை. தன்னுடைய சரீரத் தில் பெலனில்லை என்று அவர் கவலை கொள்வதில்லை. தேவன் தன க்கு கொடுத்த வரத்தின்படி, தேவ சித்தம் தன் வாழ்வில் நிறைவேற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக நிலைத்திருந்தார். நமக்கு அரு ளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களா னபடியினாலே, தேவன் தந்த பெலத்தின்படி, அவருடைய பரிபூரண திருச்சித்தத்தை எங்கள் வாழ்வில் நிறைவேற்றுவதே எங்கள் நோக் கமாக இருக்க வேண்டும். பகிர்ந்து கொடுக் கிறவன் வஞ்சனை யில் லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதை யாயிருக்கக் கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.

ஜெபம்:

பரலோக தேவனே, இந்த பூமியிலே உம்முடைய சித்தம் நிறை வேற வேண்டும் என்பதையே இலக்காக கொண்டு, நீர் என்னிடத்தில் ஒப்புவித்ததை நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:13