புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 29, 2020)

மனம் தளர்ந்து போகாதிருங்கள்

லூக்கா 18:7

அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்க ளாகிய தம்மால் தெரி ந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியா யஞ்செய்யாமலிருப்பாரோ?


சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்கு றித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார். ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். அந்தப் பட் டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய் யவேண்டும் என்று விண்ணப்பம்பண் னினாள். வெகுநாள்வரைக்கும் அவ னுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன் நான் தேவனுக்குப் பயப்ப டாமலும் மனுஷரை மதியாமலும் இரு ந்தும், இந்த விதவை என்னை எப் பொழுதும் தொந்தரவு செய்கிறபடி யினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியா யஞ்செய்யவேண்டும் என்று தனக்கு ள்ளே சொல்லிக்கொண்டான் என்றார். பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன் னதைச் சிந்தித்துப்பாருங்கள். அந்தப்ப டியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர் களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ் செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு கூறியிரு க்கின்றார். அநீதியுள்ளவர்கள், அன்பில்லாதவர்கள், கடின இருதயமு ள்ள வர்கள் அப்படி செய்யும் போது, நீதிபரராகிய தேவன் நீதி செய் யாதிருப்பாரோ? நிச்சயமாக நீதி செய்வார். இரக்கம் நிறைந்த தேவன் இரங்காதிருப்பாரோ? நிச்சயமாக இரங்குவார். பூலோகத்திலே இருக்கி ன்ற எங்கள் பெற்றோர் நன்மையான ஈவுகளை பிள்ளைகளுக்கு கொடு க்க அறிந்திருக்கும் போது, அன்புள்ள பரம பிதா நன்மையானவை களை ஒரு போதும் மறைத்து வைப்பதில்லை. எனவே மனம் தளரா மலும், சோர்ந்து போகாமலும் இருந்து, என்ன நடந்தாலும் என் தேவ னில் நான் விசுவாசமாயிருப்பேன் என்று உறுதியாய் நிலைத்திருக்க வேண் டும்;.

ஜெபம்:

வாக்குரைத்த தேவனே, நீர் உம்முடைய பிள்ளைகளை நேசி க்கின்றீர் என்பதை எப்போதும் உணர்ந்தவனா(ளா)ய், உம்முடைய நேரத்தி ற்காக பொறுமையாக இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 11:9-13