புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 28, 2020)

உதவி செய்யும் ஆவியானவர்

ரோமர் 8:26

அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்.


இந்த உலகத்திலே நாங்கள் உயிர் வாழும்வரை தேவ பிள்ளைளுக்கு உபத்திரவங்களும், சவால்களும், போராட்டங்களும் உண்டு. அந்தப்ப ட்டியலில், தினமும் வேத வார்த்தைகளை வாசிப்பதும், ஜெபிப்பதும் பலருடைய வாழ்க்கையிலே இடம் பெறுகின்றது. அதாவது, நாளாந்தம் வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் ஒரு சிலருக்கு சவாலாக மாறிவிடுகின்றது. “நான் தினமும் வேத த்தை வாசிப்பதுமில்லை, ஜெபிப்பது மில்லைஇ எப்படி அவைகளை செய்வ து?” என்று கேட்பதும், வைத்தியசாலை க்கு சென்றேன், வைத்தியர் நல்ல மரு ந்தைக் கொடுத்திருக்கின்றார். ஆனால் அதை எப்படி உட்கொள்வது? என்பத ற்கு ஒத்திருக்கும். இது ஒரு கடினமான செயல் அல்ல. ஆனால் கடினமானது போல தோன்றுகின்றது. எங்கள் வாழ்க்கையில் இருக்கும் சில பழக்கவழக்கங்கள் மாற்றப்பட வேண்டும். அதை செய்வதற்குரிய பெலனை கொடுக்க தேவ ஆவியானவர் ஆயத் தமுள்ளவராகவே இருக்கின்றார். “நான் இருக்கின்ற வண்ணமாகவே எப் படி தேவ சமுகத்திற்கு போவது? நான் என் வாழ்வில் சில வேண் டப்படாத பழக்கங்களை விட்ட பின்பு, ஜெபிக்க ஆரம்பிப்பேன்” என்று சிலர் சொல்லிக் கொள்வார்கள். அப்படியல்ல, நீங்கள் உங்களை பலவந் தம் பண்ணிக் கொண்டு, அறைவீட்டை பூட்டிக் கொண்டு, தினமும் சில நிமிடங்கள் ஜெபிக்க ஆரம்பியுங்கள். அதிக வசனிப்புக்கள் தேவையி ல்லை. மற்றவர்கள் பேசும் அடுக்கு மொழிகள் அவசியமில்லை. உங் களை நேசிக்கும் தந்தையோடு நீங்கள் பேசுவது போல, உங்கள் மன தைத் திறந்து உங்கள் நிலையை தேவனுக்கு தெரியப்படுத்துங்கள். எங் கள் பாவங்களுக்காக பாவமறியாத பரிசுத்தராகிய இயேசுதாமே பலர் முன்னிலையிலே, அவமானத்தையும் நிந்தைகளையும், வெட்கத்தையும், பாடுகளையும் சகித்தார். அறைவீட்டை பூட்டிக் கொண்டு எங்களை நேசி க்கும் இயேசுவோடு பேசுவது வெட்கமாக தோன்றுகின்றதா? ஒரு நேர த்தை குறிப்பிட்டு, இன்றே ஜெபிக்க ஆரம்பியுங்கள். ஒருவேளை எழு ந்திருக்க முடியாமல் வியாதி ஏற்பட்டால், அந்நாட்களிலே, உங்கள் படு க்கையிலிருந்து இயேசுவை நோக்கிப் பாருங்கள். நாம் ஏற்றபடி வேண் டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியா னவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டு தல்செய்கிறார். கற்றுத் தரும் ஆவியாவனர் எப்படி நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்பதை உங்களுக்கு கற்றுத் தந்து நடத்துவார்.

ஜெபம்:

வழிநடத்தும் தேவனே, என் வாழ்க்கையிலே நான் மாற வேண் டிய இடங்கள் உண்டு. தினமும் நான் உம்முடைய பாதத்தில் தரித்தி ருந்து ஜெபிக்கும்படி நான் தீர்மானித்திருக்கின்றேன். எனக்கு உதவி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:5-13