புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 27, 2020)

ஆவிக்குரிய ஆகாரம்

1 பேதுரு 5:8

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசா சானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.


பல்கலைக் கழகத்திலே படித்துக் கொண்டிருக்கும் மாணவனொருவன், தன் பாடங்களிலே மிகவும் கருத்துடன் கற்று வந்தான். அத்தோடு வார இறுதிநாட்களிலே, பகுதிநேரமாக வேலையும் செய்து, தன் குடும்ப த்திற்கு மிகவும் பிரயோஜனமுள்ளவனாக இருந்தான். இப்படியாக பல மாதங்கள் சென்றபின்பு, அவனுடைய சரீரத்திலே பெலவீனங்கள் உண் டாக ஆரம்பித்தது. எடுக்க வேண்டிய ஆகாரத்தை நேரத்திற்கு முறைப்படி எடுக்காததாலும், உடலிற்கு வேண்டிய தே கப் பயிற்சியை எடுக்காததாலும், உட லுக்கு தேவையான இளைப்பாறு தல் இல்லாததாலும் அவன் சீக்கிரமாக வைத் தியரை சந்திக்க வேண்டியதாயிற்று. எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நற்கிரியைகள், செயற்திட்டங்கள், ஐக்கிய ஒன்று கூடல்கள் யாவும் நல்லது. ஆனால், எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரோக்கியத்தைப் பேண, ஆவிக்குரிய போஜனமாகிய வேத வசனத்தை நாங்கள் தினமும் நேரம் தவ றாது உட்கொள்ள வேண்டும். உள் ளான மனிதன் நாளுக்கு நாள் கிறிஸ்துவுக்குள் புதிதாக்கப்பட வேண்டும். கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பெலப்பட வேண்டும். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்த னங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோ காதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்குநா ளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித் தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொண்டவர்களாய் எப்போதும் ஆய த்தமுள்ளவர்களாக காணப்பட வேண்டும். தேவன் தரும் ஒய்வு நேர த்தில், இளைப்பாற வேண்டும். இவைகளை செய்யத் தவறும் போது, எங்கள் ஆவிக்குரிய போராட்டத்திலே பின்னடைவை சந்திக்க நேரிடும். எனவே எந்த நற்கிரியைகளை செய்தாலும், எப்படிப்பட்ட நன்மை தரும் செயற்திட்டங்களைச் செய்தாலும், வேத வார்த்தையை தியானிப் பதற்குரிய நேரத்தையும் ஜெபிக்கும் நேரத்தையும் தவறவிடாதிருங்கள். ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்விற்கு இவை இன்றியமையாதது.

ஜெபம்:

உள்ளந்திரியங்களை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, என் நிலையை வாழ்வின் நிலைமையை நீர் நன்றாய் அறிந்திருக்கின்றீர். உமக்காக காத்திருக்கின்றேன், நீர் என்னை விடுவித்து காத்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 10:3-4