புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 26, 2020)

கொடுக்கப்பட்டிருக்கும் நேரம்

சங்கீதம் 84:10

ஆயிரம் நாளைப்பார்க்கி லும் உமது பிராகாரங் களில் செல்லும் ஒரே நாள் நல்லது.


புதிதாக இரட்சிக்கப்பட்ட ஒரு மனிதனுக்கு அநேக நண்பர்கள் இருந் தார்கள். அவர்கள் இன்னும் இரட்சகராகிய இயேசுவின் அன்பை அறி யாததால், அவர்கள் யாவரும் தனக்கு விடுதலை தந்த இயேசுவை அறிய வேண்டும். பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலையடைய வேண் டும் என்று ஆவலாக இருந்தான். அதனால் அவர்களோடு போக்கும் வரத்துமாக இருந்து வந்தான். பழைய நண்பர்களின் விசேஷ தினங்களில் அவ ர்களை சந்தித்து வந்தான். அவ்வப் போது அவர்களோடு சேர்ந்து கிரிகெட், உதை பந்தாட்டம் போன்ற விளையாட் டுகளை விளையாடி வந்தான். நாள டைவிலே தன் பழைய நண்பர்களோடு அநேக நேரத்தை செலவிட்டான். இவன் பாவமான எந்தக் காரியமும் செய்யவில்லை. இவனுடைய எண்ண மும் நோக்கமும் நன்மையானது. ஆனால், அவனுடைய வேத வாசிப்பு, மற்றும் ஜெப நேரங்கள் நண்பர்களால் வஞ்சகமாக திருடப்படுவதை உணராதிருந்தான். பழைய நண்பர்களை மீட்கும்படி அதிக நேரத்தை அவர்களோடு செலவிடு வதைப் பார்க்கிலும், அவர்களுடைய மீட்புக்காக அதிக நேரத்தை மீட்பராகிய இயேசுவோடு செலவிடுவதே அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் அதிக பிரயோஜனத்தை கொடுக்கும் என்பதை அவன் உணராதிருந்தான். கடந்த நாட்கள் நாங்கள் தியானித்தது போல, எங்கள் பிரயாசங்கள் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்க வேண்டும். எங்கள் சொந்த கிரியைகளினால் உண்டாகும் பிரயோஜனம் அற்பமே. அந்த மனிதன் “நான் என்ன செய்ய சித்தமாயிருக்கின்றீர்” என்று இயேசுவிடம் கேட்டால், அவன் நண்பர்களை குறித்த காரியத்தை கர்த்தர் அவனுக்கு நிச்சயமாக வெளிப்படுத்துவார். எங்கள் வாழ்க்கையில் நேரங்கள் எப்படியாக செலவிடப்படுகின்றது என்பதைக் குறித்து நாங்கள் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். சங்கீதக்காரன் கூறியிருப்ப தைப் போல “சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வ ளவு இன்பமானவைகள்! வேறிடத்திலே, ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது. ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன். என்னும் வாஞ்சை எங்களில் எப்போதும் பெருக வேண்டும்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளவும், நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளவும் கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:14-17