புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 25, 2020)

ஜெப வாழ்வு ஜெய வாழ்வு

ரோமர் 12:12

ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.


நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தி னாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப் பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதய ங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். (பிலிப்பியர் 4:6-7). எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண் டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவி யினாலே ஜெபம்பண்ணி, அதன்பொ ருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். (எபேசியர் 6:18). இடை விடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய் யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறி த்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. (1 தெச 5:17-18). உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள். (லூக்கா 6:18). ஒருவ ருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. (யாக்கோபு 5:16). இப்படியாக ஜெபத்தின் அவசியத்தைக் குறித்த அநேக வார்த்தைகளை வேதத்தில் காணலாம். இவை தேவனுடைய வார்த்தைகள். அதை அவர் விருதாவாக விளம்பவில்லை. எனவே, வெற்றி வாழ்க்கைக்கு ஜெபம் இன்றியமையாதது. ஆதி அப்போஸ்தலர்களின் நாட்களிலே, தேவனு டைய வார்த்தையைச் சந்தோ~மாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ் நானம் பெற்றார்கள். அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். அதுபோலவே, சபையாரோடு, சிறு குழுக்களோடு ஐக்கியமுள்ளவர்களாக நாங்கள் ஜெபிக்க வேண்டும். அதே வேளையிலே நாங்கள் தனித்திருந்து தேவனுடைய பாதத்திலே ஜெபிக்க வேண்டும். இவ்வண்ணமாக எங்கள் மீட்பராகிய இயேசுவும் தனித்திருந்து பரம பிதாவிடம் ஜெபம் பண்ணினார். எங்கள் முன்னோ டிகளாகிய பரிசுத்தவான்கள் யாவரும், ராஜ மாளிகையிலிருந்தாலும், அடிக்கப்பட்டு சிறையிலே போடப்பட்டாலும், கல்லெறியப்பட்டு மரிக்கும் தறுவாயிலும் தேவனை நோக்கி ஜெபித்தார்கள். விசுவாசத்திலே நிலையாய் தரித்திருந்தார்கள். இந்த உலகத்தை ஜெயித்தார்கள். அவர்கள் போல நாங்களும் ஜெபத்திலே உறுதியாய் தரித்திருப்போம். இந்த உலகத்தை ஜெயம் கொள்வோம். ஜெபமே ஜெயம்.

ஜெபம்:

உன்னதமாக தேவனே, இந்த உலகத்தை ஜெயிக்கும்படிக்கு, நாங்கள் உம்மோடு உறவாடத்தக்கதாக நீர் கொடுத்திருக்கும் பெரியதான சிலாக்கித்திற்காக உமக்கு நன்றி. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறே ன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 5:13