புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 21, 2020)

யாருடன் ஐக்கியப்பட்டிருக்கின்றேன்?

2 கொரி 6:15

அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?


ஒரு மனிதன், தன் அயலிலே, தனது வீட்டிற்கு எதிர்பக்கமாயுள்ள வீட்டி ற்கு, புதிதாக வந்திருக்கும் குடும்பமானது மிகவும் ஒழுக்கமுள்ளவர்கள் என பெருமிதமாக கூறிக்கொண்டான். நாளடைவிலே, இவனுடைய மக னானவன், முன்வீட்டிற்கு சென்று அந்த குடும்பத்திலுள்ள சிறு பையனு டன் சேர்ந்து விளையாடுவது வழக்கமாயிற்று. கிரிகெட், உதைபந்தா ட்டம் என்று பல வெளியரங்கு விளை யாட்டு களை விளையாடி வந்தார்கள். சில கிழமைகளுக்கு பின், முன் வீட்டில் வசிக்கும் அந்த சிறு பையன், தன்னிடம் இருக்கும் கம்யூட்டர் விளையாட்டுக்க ளை அந்த மனிதனுடைய மகனுக்கும் அறிமுகம் செய்தான். துப்பாக்கிச் சண்டைகளும், வன்முறைகளும் நிறை ந்த கம்யூட்டர் விளையாட்டை முதல் முiறாயக கண்டதும் இவன் சற்று தயக்கமடைந்து, தான் அதை விளையாட விரும்பவில்லை என்றும், தனது பெற்றோர் அதை அனுமதிக்க மாட்டார்கள் என்றும் கூறனான்.. மற்றவனோ, இது வெறும் விளையாட்டு, மிகவும் சுவாரசியமானது, என் னுடைய பெற்றோர், என்னுடைய கடந்த பிறந்த தினத்தன்று இதை வாங்கிக் கொடுத்தார்கள். சற்று அமர்ந்திருந்து நான் விளையாடுவதை பார் என்றான். விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்த மகனானவனு க்கோ அதின் மேல் ஆசை உண்டாகிவிட்டது. சில நாட்களுக்கு பின் இருவரும் அந்த கம்யூட்டர் விளையாட்டை எந்த தயக்கமும் இன்றி, பரவசத்துடன் விளையாடி வந்தார்கள். இந்த சம்பவத்திற்கு ஒத்ததா கவே, பெரியவர்களாகிய எங்களது வாழ்க்கையும் இருக்கின்றது. எங் கள் வாழ்வில் ஆகாதது என்றும், யோக்கியமற்றது என்றும் தள்ளப்ப ட்டிருக்கும் சில காரியங்கள், நாளடைவில் வழக்கமாதொன்றாக மாறி விடுகின்றது. பொருளாசை ஒரு பொருட்டல்ல என்று வாழும் ஒரு குடும் பத்துடன் நாங்கள் ஐக்கியபடும் போது, நாளடைவில் பொருளாசை யின் பின்விளைவுகளின் உணர்வு எங்கள் இருதயத்தைவிட்டு அகன்று போய்விடும். இவ்வண்ணமாகவே தேவனுடைய ஜனங்கள், தங்கள் மத்தியிலுள்ள அந்நிய ஜனங்களால், தேவன் கொடு த்த கட்டளைகளை மீறி, பரிசுத்த வாழ்வை கெடுத்துக் கொண்டார்கள். நாங்கள் மற்றய மனி தர்கள் மேல் எங்கள் தேவ அன்பை காண்பித்து, நீடிய பொறுமையு ள்ளவர்களாக அவர்களுடைய இரட்சிப்புக்காக ஜெபிக்க வேண்டும். ஆனால், நாங்கள் யாருடன் ஐக்கியமாயிருக்கின்றோம் என்பதைக் குறி த்து மிகவும் ஜாக்கிரதையுள்ளவர்களாகவும் எப்போதும் விழிப்புள்ளவர் களாகவும் இருக்க வேண்டும்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, நீர் எனக்கு தந்திருக்கின்ற பிரகாசமுள்ள மனக் கண்களை நான் குருடுபடுத்தாதபடிக்கு, உம் வார்த்தையின்படி தூய வாழ்க்கை வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:8