புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 20, 2020)

கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்கள்

கலாத்தியர் 3:27

ஏனெனில், உங்களில் கிறி ஸ்துவுக்குள்ளாக, ஞான ஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்த னைபேரும் கிறிஸ்து வைத் தரித்துக்கொண்டீ ர்க ளே.


சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவய வங்களெல்லாம் அநேகமாயிருந்தும் அவை யாவும் அந்த சரீரத்தின் நலனுக்காக ஒன்றாக இசைந்து செயற்படுகின்றது. ஆனால், அந்நிய சரீரத்தின் வேறொரு அவயவத்தை எங்கள் சரீரத்தோடு இணைத்துக் கொண்டால் அதன் செயற்பாடு எங்கள் சரீரத்திற்கு பாதகமாக மாறிவிடும். நவீன உலகத்திலே, சரீரத்தின் அவய வங்கள் சிலவற்றை மாற்று சத்திர சிகிச்சை செய்கின்றார்கள். ஆனால் அத ற்கு ஒரு முறை உண்டு. அதுபோலவே அந்நிய அவயவங்கள் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் இணைந்து கொ ள்ளலாம். ஆனால் அதற்கு படிமுறை கள் உண்டு. அதாவது, ஒரு மனிதன் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கமாக இருக்க விரும்பினால், அவன் இயேசு கிறிஸ்துவே மீட்பர் என்று விசுவாசிக்க வேண்டும். அதன்பொருட்டு, தன் பாவங்களை தேவனிடம் அறிக்கையி ட்டு, மனந்திரும்பி கிறிஸ்துவுக்குள், பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே முழுக்கு ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். (மத்Nதுயு 28:19, மாற்கு 16:16, 1 பேதுரு 3:21). இது தேவன் நியமித்த ஒழுங்கு. தேவன் விருதாவாய் பேசுவதில்லை. இதற்கு கீழ்படிபவன், தன்னை கிறிஸ்து வோடு இணைந்திருக்கும்படி தன்னை அர்ப்பணிக்கின்றான் என்பதை உறுதி செய்துகொள்கின்றான். அப்படி, தன்னை கிறிஸ்துவுக்கு அர்ப்ப ணிக்காதவன், கிறிஸ்துவின் ஆவியை உடையவனல்ல. அவன் கிறிஸ்து வுக்கு அந்நியனாக இருப்பான். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவ ருடையவனல்ல. (ரோமர் 8:9, 1 கொரி 12:3). எனவே, அந்நிய அவயவ ங்களை உங்கள் சொந்த சரீரத்தோடு இணைப்பதைக் குறித்து எச்சரி க்கையாயிருங்கள். எடுத்துக்காட்டாக, கிறிஸ்துவையுடையவனாயிராத ஒருவனை, சபையில் அங்கத்தவனாக்குவதற்காக அவனை சபையின் உதவி ஊழியங்களுக்காக ஏற்படுத்தும் போது அதனால் பின்விளை வுகள் உண்டு. கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன்; கிறிஸ்துவின் சிந்தை யையுடையவனல்ல. அவன் தன் மாம்சத்திற்குட்பட்டவனாயிருப்பான். குறி த்த காலத்திலே அவன் கனிகள் வெளிப்படும். நாங்களோ கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்தவர்களாக விழிப்புள்ளவர்காக வாழக்கடவோம்.

ஜெபம்:

பரலோக தந்தையே, என் வாழ்வின் கிறிஸ்துவின் சிந்தையை தரித்தவனாக உம்முடைய திருச்சித்தத்தை என் வாழ்வில் நிறைவேற்றி முடிக்கும்படி எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபி க்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:9